Wednesday, May 28, 2025

இனி... நாடாளுமன்ற வளாகத்தில் எம்.பி.க்கள் யாரும் போராட்டங்கள் நடத்தக்கூடாது - நாடாளுமன்ற செயலகம் அறிவிப்பு

Government Of India India
By Nandhini 3 years ago
Report

புத்தகம் வெளியிட்ட மக்களவை செயலகம்

நேற்று நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தை மக்களவை செயலகம் வெளியிட்டது.

மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஜூலை 18ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது. அந்த புத்தகத்தில், சர்வாதிகாரம், வெட்கக்கேடு, துரோகம் செய்தார், ஊழல், நாடகம், ஒட்டுக்கேட்பு, வாய்ஜாலம் காட்டுபவர், திறமையற்றவர், முட்டாள்தனம், பாலியல் தொல்லை உள்ளிட்ட வார்த்தைகள் பயன்படுத்தக்கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Parliament

இதற்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

போராட்டங்கள் நடத்த தடை

இந்த சர்ச்சை ஓயாத நிலையில், தற்போது, நாடாளுமன்ற வளாகத்தில் எம்.பி.க்கள் யாரும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடக்கூடாது என்று நாடாளுமன்ற செயலக பொதுச்செயலாளர் பி.சி.மோடி அறிவித்திருக்கிறார். மேலும், இது குறித்து அறிக்கை ஒன்றையும் எம்பிக்களுக்கு அனுப்பி இருக்கிறார்.

அந்த அறிக்கையில்,

நாடாளுமன்ற வளாகத்திற்குள் மத நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது. எம்.பி.க்கள் உண்ணாவிரதம், தர்ணாவில் ஈடுபடக் கூடாது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற செயலக பொதுச் செயலாளரின் இந்த புதிய அறிவிப்பால் பெரும் சர்ச்சையும், சலசலப்பும் எழுந்திருக்கிறது.