இனி நாடாளுமன்றத்தில் இந்த வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது - புத்தகத்தை வெளியிட்ட மக்களவை செயலகம்
By Nandhini
புத்தகம் வெளியிட்ட மக்களவை செயலகம்
நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது.
மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது.
அந்த புத்தகத்தில், சர்வாதிகாரம், வெட்கக்கேடு, துரோகம் செய்தார், ஊழல், நாடகம், ஒட்டுக்கேட்பு, வாய்ஜாலம் காட்டுபவர், திறமையற்றவர், முட்டாள்தனம், பாலியல் தொல்லை உள்ளிட்ட வார்த்தைகள் பயன்படுத்தக்கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.