#Breaking - மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பு!
மக்களவை தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேர்தல்
நாட்டின் மக்களவை தேர்தல் பெரும் எதிர்பார்புகளை ஏற்படுத்தியுள்ளது. 10 ஆண்டு ஆட்சியை மீண்டும் தக்கவைத்து கொள்ள பாஜகவும், பாஜகவை அகற்றிட வலுவான எதிர்க்கட்சிகளின் கூட்டணியை அமைத்து காங்கிரஸ் கட்சியும் களம் காணுகின்றன.
கூட்டணி பேச்சுவார்த்தைகள் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டிவிட்ட நிலையில், தேர்தலை பிரச்சாரங்களை கட்சிகள் துவங்கிவிட்டன.
தற்போது தேர்தல் தேதியை அறிவித்து, தேர்தல் ஆணையம் தேர்தல் விதிகளையும் அமலுக்கு கொண்டு வந்துள்ளது.
தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
வேட்புமனு தாக்கல் துவக்கம் - மார்ச் 20
வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் - மார்ச் 27
வேட்பு மனு மீது பரிசீலனை - மார்ச் 28
வேட்பு மனுக்களை திரும்பப்பெற கடைசி நாள் - மார்ச் 30
7 கட்டமாக நடைபெறும் தேர்தலில்,
1 கட்டம் ஏப்ரல் 19
2 கட்டம் ஏப்ரல் 26
3 கட்டம் மே 7
4 கட்டம் மே 13
5 கட்டம் மே 20
6 கட்டம் மே 25
7 கட்டம் ஜூன் 1
வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ஆம் தேதி நடைபெறுகிறது.
4 சட்டமன்ற தேர்தல்கள்
சிக்கிம் - ஏப்ரல் 19
அருணாச்சல பிரதேசம் - ஏப்ரல் 19
ஆந்திர பிரதேசம் - மே 13
ஒடிஷா - மே 13, 20, 25 மற்றும் ஜூன் 1 என 4 கட்டம்.
மொத்தமாக 26 இடைத்தேர்தல்கள் நடைபெறவுள்ளன.விளவங்கோடு இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறுகிறது.
நடப்பு தேர்தலில் நாட்டில் மொத்தமாக 96.8 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.
அதில், 1.82 கோடி பேர் முதன் முறை வாக்காளர்கள். 88.4 லட்சம் மாற்றுத்திறனாளிகள் வாக்காளர்களும் உள்ளனர். ஆண் வாக்காளர்கள் - 49.7 கோடி பேர். பெண் வாக்காளர்கள் - 47.1 கோடி பேர் உள்ளனர்.