பாரிஸ் ஒலிம்பிக் : பதக்கத்துடன் வந்த வீரர்கள் - பார்த்து மகிழ்ந்த பிரதமர் மோடி!
இந்திய ஹாக்கி ஆடவர் அணியினர், மனு பாக்கர், சரப்ஜோத் சிங், ஸ்வப்னில், அமன் ஷெராவத் உள்ளிட்டோர் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
பாரீஸ் 2024 ஒலிம்பிக்
33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் நடைபெற்றது. இந்த போட்டியில் அமெரிக்கா, கிரேட் பிரிட்டன், சீனா, இந்தியா உள்ளிட்ட 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.மேலும் 39 விளையாட்டுகளில் 329 நிகழ்வுகள் நடைபெற்றனர்.
அந்த வகையில், இந்திய அணி சார்பில் வில்வித்தை ,தடகளம் ,பேட்மிட்டன் ,குத்துசன்டை ,குதிரையேற்றம் ,ஆக்கி ,கோல்ப் ,ஜுடோ , துடுப்பு படகு ,பாய்மர படகு ,துப்பாக்கி சுடுதல் நீச்சல் ,டேபிள் டென்னிஸ் , டென்னிஸ்,பளு தூக்குதல் மல்யுத்தம் ஆகிய 16 விளையாட்டுகளில் 70 வீரர்களும் 47 வீராங்கனைகளும் பாகேற்றனர்.
பிரதமர் மோடி
இதில் நீரஜ் சோப்ரா, மனு பேக்கர், சரப்ஜோத் சிங், ஸ்வப்னில் குசலே, அமன் செஹ்ராவத் மற்றும் இந்திய ஹாக்கி அணியினர், இந்தியாவிற்கு ஆறு பதக்கங்கள் ( ஒரு வெள்ளி மற்றும் ஐந்து வெண்கலம் )வென்று பதக்க பட்டியலில் 71 வது இடத்தைப் பிடித்தனர். இதனை தொடர்ந்து பாரிஸ் ஒலிம்பிக் போட்டி 2024 கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதி நிறைவடைந்தது.
நாடு திரும்பிய வீரர் ,வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது .
இந்த நிலையில் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றவ இந்திய ஹாக்கி ஆடவர் அணியினர், மனு பாக்கர், சரப்ஜோத் சிங், ஸ்வப்னில், அமன் ஷெராவத் உள்ளிட்டோர் டெல்லியில் உள்ள இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.