ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 2 வது பதக்கம் - மனு பாக்கர் வரலாற்று சாதனை
ஒலிம்பிக்கில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் 2வது பதக்கத்தை வென்றுள்ளார்.
ஒலிம்பிக்
2024 ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஜூலை 26 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11 ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தியா சார்பாக 16 விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க 117 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்று வருகின்றனர்.
இதில் 2 ம் நாளன்று பெண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்களை மனு பாக்கர் வெண்கலப் பதக்கம் வென்று இந்த லிம்பிக் தொடரில் இந்தியாவுக்கான பதக்க கணக்கை தொடங்கி வைத்தார்.
வரலாற்று சாதனை
இந்நிலையில் 4ஆவது நாளான இன்று நடைபெற்ற 10மீ ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் ஜோடி தென் கொரியா ஜோடியை வீழ்த்தி வெண்கல பதக்கம் வென்றுள்ளனர்.
இதன்மூலம் ஒலிம்பிக் போட்டிகளில் துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் பெண் என்ற பெருமையை பெற்றிருந்த மனுபாக்கர், துப்பாக்கிச் சுடுதலில் ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களைப் பெற்ற இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். மற்றொரு வீரரான சரப்ஜோத் ஒலிம்பிக்ஸில் தனது முதல் பதக்கத்தை வென்றுள்ளார்.

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

Optical illusion: படத்தில் நீங்கள் முதலில் பார்ப்பது கோளமென்றால்... நீங்கள் இப்படிப்பட்டவரா? Manithan

இலங்கையால் சமாளிக்கவே முடியாத ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி: சி.ஐ.டியிடம் வெளிப்படுத்திய மைத்திரி! IBC Tamil
