பாரிஸ் ஒலிம்பிக்; 3வது பதக்கத்தை தட்டி தூக்கிய இந்தியா - ஸ்வப்னில் குசாலே சாதனை
பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா 3வது வெண்கல பதக்கத்தை வென்றுள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக்
2024 ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஜூலை 26 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11 ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தியா சார்பாக 16 விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க 117 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்று வருகின்றனர்.
இன்று (0.1.08.2024) நடந்த ஆடவர் 50 மீட்டர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே (Swapnil Kusale) வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா வென்றுள்ள மூன்றாவது வெண்கலப் பதக்கம் இதுவாகும்.
முதல் இந்தியர்
இதன் மூலம் 50 மீட்டர் ரைபிள் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை ஸ்வப்னில் குசாலே படைத்துள்ளார்.
ஏற்கனவே பெண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் மனு பாக்கர் முதல் வெண்கலப் பதக்கம் வென்றார். இதன் பின் நடந்த 10மீ ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கல பதக்கம் வென்றுள்ளனர்.