புனேயில் வீடு..5 கோடி கொடுங்க..ஒலிம்பிக் பதக்கம் வென்றவரின் தந்தை பரபரப்பு பேச்சு!
பாரிஸ் ஒலிம்பிக், துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற தனது மகனுக்கு, ரூ.5 கோடி பரிசுத்தொகை மற்றும் புனேயில் வீடு வாங்கி கொடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.
மகாராஷ்டிரா
மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரை சேர்ந்த ஸ்வப்னில் குசேலே பாரிஸ் ஒலிம்பிக், துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். இவருக்கு மகாராஷ்டிரா மாநில அரசு ரூ.2 கோடி பரிசுத் தொகை வழங்கி கவுரவித்தது.
இந்த தொகை ஏமாற்றம் அளிப்பதாக, குசேலேவின் தந்தை கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து ஸ்வப்னில் குசேலேவின் தந்தை கூறியதாவது:ஹரியானா அரசு தனது மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ஒவ்வொரு வீரருக்கும் ரூ.5 கோடி வழங்குகிறது.
ஆனால் மஹாராஷ்டிரா அரசு ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்பவருக்கு ரூ.5 கோடியும், வெள்ளிப் பதக்கம் வெல்பவருக்கு ரூ.3 கோடியும், வெண்கலப் பதக்கம் வெல்பவருக்கு ரூ.2 கோடியும் வழங்குகிறது.
பாரிஸ் ஒலிம்பிக்
நாங்கள் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் தொகை குறைவாகக் கொடுக்கப்படுகிறது.இதுவே சட்டமன்ற உறுப்பினர்., அல்லது அமைச்சர் மகனாக இருந்திருந்தால் வெகுமதித் தொகை அதிகமாக இருந்திருக்குமோ? என்று குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர்,’’மஹாராஷ்டிராவில் விளையாட்டு வளாகத்தில் உள்ள 50 மீட்டர் மூன்று நிலை துப்பாக்கி சுடும் அரங்குக்குத் தனது மகனின் பெயரைச் சூட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
மேலும் ஸ்வப்னிலுக்கு பயிற்சிக்கு எளிதாகச் செல்லும் வகையில் பாலேவாடி விளையாட்டு மைதானத்திற்கு அருகில் ஒரு வீடு வாங்கி கொடுக்க வேண்டும். ரூ.5 கோடி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.