இறந்த மகனின் விந்தணுவைக் கேட்ட பெற்றோர்; மறுத்த மருத்துவமனை - நீதிமன்றம் அதிரடி!

Cancer Delhi Death
By Sumathi Oct 13, 2024 12:30 PM GMT
Report

இறந்த மகனின் விந்தணுவைக் கேட்ட பெற்றோருக்கு மருத்துவமனை மறுப்பு தெரிவித்துள்ளது.

 விந்தணு மாதிரி

டெல்லியைச் சேர்ந்தவர் ப்ரீத் இந்தர் சிங்(30). இவருக்கு, புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டு கீமோதெரபி சிகிச்சை எடுத்துக்கொள்ள பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

இறந்த மகனின் விந்தணுவைக் கேட்ட பெற்றோர்; மறுத்த மருத்துவமனை - நீதிமன்றம் அதிரடி! | Parents Request For Dead Sons Sperm Delhi

மேலும், அதற்கு முன் தனது விந்தணு மாதிரியை உறைய வைப்பதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளார். அதன்படி, விந்தணு மாதிரியை அதற்கான மையத்தில் போய் சேமித்துள்ளார். பின் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், அவரது பெற்றோர் தங்கள் மகன் சேமித்து வைத்திருக்கும் விந்தணுவைத் தரும்படி கேட்டுள்ளனர். ஆனால், அந்த மையம் தர மறுத்துள்ளது. இதனையடுத்து ’தங்கள் மகனின் உறையவைக்கப்பட்ட விந்தணு மாதிரியை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

கட்டுப்பாட்டை மீறிய விந்தணு தானம்; உலகளவில் உடன்பிறப்புகள் - எச்சரிக்கை!

கட்டுப்பாட்டை மீறிய விந்தணு தானம்; உலகளவில் உடன்பிறப்புகள் - எச்சரிக்கை!

நீதிமன்றம் அதிரடி

அதைக் கொண்டு வாடகைத் தாய் மூலம் பேரக்குழந்தையை வளர்க்க விரும்புகிறோம். மேலும், தனது தலைமுறையைக் காக்க விரும்புகிறோம்’ என டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

delhi high court

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிரதீபா சிங், ”மனைவி அல்லது குழந்தைகள் இல்லாத நிலையில், இந்து வாரிசுரிமைச் சட்டத்தின்கீழ் அவர்கள் சட்டப்பூர்வ வாரிசுகளாக மாறியதால், பெற்றோருக்கு விந்தணுவுக்கு உரிமை உண்டு. நபரின் விந்தணுவைச் சொத்தாக பாவிக்க முடியும் என்பதாலும்,

இந்துமத சொத்துரிமை சட்டத்தின்படி பெற்றோருக்கு மகனின் சொத்தில் முதல் உரிமை உள்ளது என்பதாலும் இறந்த மகனின் சேமிக்கப்பட்ட விந்தணுவை பெற்றோர்களிடம் ஒப்படைக்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளார்.