பெற்றோரை மீறி காதல் திருமணம்.. பாசத்தோடு விருந்துக்கு அழைத்து வேலையை காட்டிய மாமனார் - அதிர்ச்சி!
மகள் காதல் திருமணம் செய்துகொண்டதால் விருந்துக்கு அழைத்து பெற்றோர் செய்த காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காதல்
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்தவர் மணி. இவர் தனது குடும்பத்தினருடன் மதுரை கே.கே.நகரில் வசித்து வருகிறார். இவரது மகன் பிரியவரதன் (22). இவரும், மதுரை மாவட்டம் பேரையூர் அருகேயுள்ள சாத்தங்குடியைச் சேர்ந்த ஜீவானந்தம் என்பவற்றின் மகள் சினேகா (21) என்பவரும் காதலித்து வந்தனர், இருவரின் வீட்டில் தெரியவந்தது, அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் இருவரும் 7 மாதத்திற்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்துகொண்டனர். யாருக்கும் தெரியாமல் கோவையில் ஒரு வாடகை வீட்டில் தனி குடித்தனம் இருந்து வந்தனர்.
பெற்றோர் செய்த காரியம்
இந்நிலையில், அவர்கள் குறித்த தகவல் தெரியவர, பிரியவரதனின் தந்தை வீட்டிற்கு வருமாறு அழைத்தார், அதில் மகிழ்ச்சியடைந்த பிரியவரதன் தனது மனைவியை அழைத்து கொண்டு சென்றார். அங்கு விருந்துக்கு அழைத்து அவர்கள் 3 நாட்களுக்கு நன்றாக உபசரித்து வந்தனர்.
அதன்பின்னர், சினேகாவின் வீட்டில் இருந்து வந்து பாசத்துடன் விருந்துக்கு அழைத்த சென்றனர். அப்பொழுது மணி தனது மகனுடன் மனைவியையும் அனுப்பி வைத்தார். அப்பொழுது காரில் செல்லும்போது, பாதியில் பிரியவரதன் மற்றும் அவரது தாயை கீழே தள்ளிவிட்டு மகளை மட்டும் அழைத்து சென்றனர்.
இதன்பிறகு பிரியவரதன் தனது மனைவியை கடத்தியதாக திருமங்கலம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதனை வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.