பையில் பிரக்னன்சி கிட் - மகளை கொடூரமாக கொன்று ஆசிட் ஊற்றிய தம்பதி!
மகளின் பையில் பிரக்னன்சி கிட் இருந்ததால் பெற்றோர் அவரை கொலை செய்துள்ளனர்.
கொலை
உத்திரபிரதேசம், அலம்பாத் என்கிற கிராமத்தில் வசித்து வருபவர் நரேஷ். இவரின் மனைவி ஷோபா. இவர்களது 21 வயது மகளை காணவில்லை என்று போலீசில் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் பென்னை தேடி வந்தனர்.
இந்நிலையில், கிராமத்துக்கு வெளியே அடையாளம் தெரியாத நிலையில் இளம்பெண் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. சென்று சடலத்தை மீட்டு விசாரித்ததில் காணாமல் போன பெண் என தெரியவந்தது. அதனையடுத்த விசாரணையில் பெற்றோர் முரணான பதிலை கூறியுள்ளனர்.
நாடகமாடிய பெற்றோர்
இதனால் சந்தேகமடைந்த போலீஸார் விசாரனையை தீவிரப்படுத்தியுள்ளனர். அதில், தங்கள் மகள் பல வாலிபர்களுடன் அடிக்கடி போனில் பேசிக் கொண்டிருந்ததாகவும், இதனால் பல வாலிபர்களுடன் தங்கள் மகளுக்கு தவறான பழக்கம் இருக்குமோ என்று சந்தேகப்பட்டு வந்த நிலையில் மகளின் பையில் கர்ப்பத்தை கண்டுபிடிக்கும் பிரக்னன்சி கிட் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து மகள் மீது சந்தேகப்பட்டு அடித்தோம்.
இப்படிப்பட்ட மகள் இருக்கக் கூடாது என்று கழுத்தை நெரித்து கொலை செய்து அதன் பின்னர்தான் அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக உடல் முழுவதும் ஆசிட் ஊற்றி கிராமத்துக்கு வெளியே உள்ள கால்வாயில் தூக்கி வீசினோம் என்று வாக்குமூலம் அளித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர்.