மகளின் புகைப்படம் மார்பிங்; அவரையும் விட்டுவைக்கவில்லை - ரோஜா வேதனை!

Roja Tamil Cinema
By Sumathi Dec 30, 2022 06:09 AM GMT
Report

தனது மகளின் புகைப்படத்தை மார்பிங் செய்து வெளியிடுகின்றனர் என நடிகை ரோஜா வேதனை தெரிவித்துள்ளார்.

நடிகை ரோஜா

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் ரோஜா. தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ளார். இவர் தன்னை அறிமுகம் செய்த இயக்குநர் ஆர்.கே. செல்வமணியையே காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

மகளின் புகைப்படம் மார்பிங்; அவரையும் விட்டுவைக்கவில்லை - ரோஜா வேதனை! | Roja S Daughter Photo Morphed

இவர்களுக்கு அன்சுமாலிகா என்ற மகளும் மகனும் உள்ளனர். தொடர்ந்து சினிமாவில் இருந்து விலகி, ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இதையடுத்து நகரி தொகுதியின் எம்எல்ஏவானார். 3 ஆண்டுகள் கழித்து நடிகை ரோஜா ஆந்திர அமைச்சரவையில் இணைக்கப்பட்டார்.

வேதனை

அவருக்கு சுற்றுலாத் துறை அமைச்சர் பதவி கிடைத்துள்ளது. இந்நிலையில், அவரது மகள் கதாநாயகியாக அறிமுகம் ஆக உள்ளதாக தகவல் வெளியாகியது. அதனைத் தொடர்ந்து, மகளின் புகைப்படத்தை யாரோ மர்ம நபர்கள் மார்பிங் செய்து மிகவும் மோசமான நிலையில் வெளியிட்டிருந்தனர்.

மகளின் புகைப்படம் மார்பிங்; அவரையும் விட்டுவைக்கவில்லை - ரோஜா வேதனை! | Roja S Daughter Photo Morphed

இதுகுறித்து பேசிய அவர், தனது மகளின் புகைப்படத்தை மார்பிங் செய்து மர்ம நபர்கள் வெளியிட்டுள்ளனர். நான் சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் பல பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளேன். ஆனால் என் குடும்பத்தினர் மீது தொடர்ந்து அவதூறுகள் பரப்புவது வருத்தம் அளிக்கிறது.

இதனால் என் மகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார். இது போன்ற விஷயங்கள் பிரபலங்களுக்கு நடப்பது சகஜமே என கூறியுள்ளார்.