பையன் மேல எப்படி கை வைக்கலாம் - ஆசிரியரை ஓட ஓட விரட்டி புரட்டியெடுத்த பெற்றோர்!
மகனை அடித்ததால் பெற்றோர் ஆசிரியரை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திட்டிய ஆசிரியர்
செங்கல்பட்டு, திருப்போரூரைச் சேர்ந்தவர்கள் சிவலிங்கம் - செல்வி தம்பதி. இவர்களுக்கு வயதில் பிரகதீஸ் என்ற மகன் உள்ளார். இவர் தனது தாத்தாவுடன் கீழநம்பிபுரத்தில் வசித்துவருகிறார். அங்குள்ள அரசு உதவி பெறும் இந்து தொடக்கப் பள்ளியில் 2ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், அங்கு ரகதீஸ் கீழே விழுந்ததாகச் சொல்லப்படுகிறது. அப்போது மெதுவாக விளையாடும்படி ஆசிரியர் பாரத் திட்டியுள்ளார். ஆனால், மாணவர் தாத்தாவிடம் ஆசிரியர் அடித்ததாகக் கூறியுள்ளார். இதனால் அவர் 100க்கு அழைத்து புகாரளித்துள்ளார்.
சரமாரி தாக்குதல்
அதன் அடிப்படையில், போலீஸார் பள்ளிக்கு சென்று விசாரித்ததில் அப்படி எதுவும் நடக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாணவனின் பெற்றோர் மற்றும் தாத்தா பள்ளிக்கு சென்று ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்து அங்குள்ள பொருட்களையெல்லாம் உடைத்துள்ளனர்.
மேலும், மூவரும் தங்களது காலணியை எடுத்து அவரை ஓட ஓட விரட்டி தாக்கியுள்ளனர். இதனை கண்டித்த தலைமை ஆசிரியை குருவம்மாளை சேலையை பிடித்து இழுத்து தாக்கியுள்ளனர். அதில் கதறியவரின் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் புகாரளித்துள்ளனர்.
அதன்பின் தாக்குதலில் ஈடுபட்ட மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
இதுகுறித்த வீடியோ வெளியாகி கண்டனத்திற்குள்ளாகியுள்ளது.