வகுப்பறையில் ஆசிரியரை ஆபாசமாக திட்டி தாக்கிய மாணவர்கள் - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

By Nandhini Apr 21, 2022 10:19 AM GMT
Report

திருப்பத்தூர், ஆம்பூர் அருகே அரசுப் பள்ளி ஒன்று உள்ளது. அந்தப் பள்ளியில் தாவரவியல் ரெக்கார்ட் நோட் சமர்ப்பிக்காமல் வகுப்பறையிலேயே ஒரு மாணவன் பாய் போட்டு தூங்கி இருக்கிறான்.

இதைப் பார்த்த ஆசிரியர் அந்த மாணவனிடம் சென்று, என்ன இது... வகுப்பறையில் தூங்கிக்கொண்டிருக்கிறாய்... எங்கே ரெக்கார்ட் நோட் என்று கேட்டுள்ளார்.

இதற்கு அந்த மாணவனும் இன்னும் 2 மாணவர்களும் வகுப்பறையில் ஆசிரியரை ஆபாசமாக திட்டி தாக்கியுள்ளனர். 

மாணவர்கள், ஆசிரியரை ஆபாசமாக திட்டி தாக்கியதை வகுப்பறையில் இருந்த சக மாணவர்கள் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டனர்.

இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. இதனையடுத்து, மாதனூர் அரசு பள்ளியில் கோட்டாட்சியர், வட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், ஆசிரியரை தாக்கிய அந்த 3 மாணவர்கள் பள்ளியிலிருந்து சஸ்பெண்ட் செய்து அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.  

வகுப்பறையில் ஆசிரியரை ஆபாசமாக திட்டி தாக்கிய மாணவர்கள் - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ | Teacher Attack Student