பரந்தூர் விமான நிலையம்..13 கிராமம் போராட்டம் - தற்காலிக வாபஸ்!
பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய 13 கிராம மக்கள் போராட்டத்தை வாபஸ் செய்வதாக அறிவித்துள்ளனர்.
விமான நிலையம்
சென்னையின் இரண்டாவது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள பரந்தூரில் அமையவிருக்கிறது என ஆகஸ்ட் 1-ல் மத்திய விமானப் போக்குவரத்துத்துறை இணையமைச்சர் வி.கே.சிங், அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
அதனையடுத்து, விவசாய நிலங்கள், தரிசு நிலத்தில் மேயும் கால்நடைகள், தாமரை ஏரிகள் என விவசாய மண்டலம் போல் இருக்கும் பரந்தூர் ஊராட்சி மக்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து 80 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர்.
தற்காலிக வாபஸ்
இந்நிலையில், அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் தலைமையில் போராட்ட குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. மேலும் அக்டோபர் 17 ஆம் தேதி கோட்டையை நோக்கி நடத்தவிருந்த பேரணியையும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, அனைத்து விதமான போராட்டத்தையும் கைவிடுவதாக விவசாய கூட்டமைப்பு அறிவித்துள்ளது.