திருமாவளவன் காலில் விழுந்து கதறிய பெண்கள்

Thol. Thirumavalavan
By Thahir Sep 19, 2022 12:45 PM GMT
Report

கருத்து கேட்க சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனின் காலில் விழுந்து பெண் கதறின.

புதிய விமான நிலையம் - மக்கள் எதிர்ப்பு 

காஞ்சிபுரம் மாவட்டம் பாரந்தூர் பகுதியில் சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதில் காஞ்சிபுரம் தாலுகாவிற்கு உட்பட்ட பரந்தூர்,வளத்தூர், தண்டலம், நெல்வாய், மேல்பொடவூர், மடப்புரம், மற்றும் ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவிற்கு உட்பட்ட எடையார்பாக்கம், குனராம்பாக்கம் மகாதேவி மங்கலம், ஏகனாபுரம்,சிங்கல்படி உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளில் 4750 ஏக்கர் பரப்பளவில் விமான நிலையம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பரந்தூர் விமான நிலையம் அமைக்க 13 கிராமத்தைச் சேர்ந்த கிராமங்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

திருமாவளவன் காலில் விழுந்து கதறிய பெண்கள் | Women Fell At Thirumavalavan S Feet And Screamed

அதிலும் குறிப்பாக விலை நிலங்களுடன் குடியிருப்புகளும் அகற்றப்பட வாய்ப்புள்ளதாக அறிந்து ஏகனாபுரம் மக்கள் தினம்தோறும் வேலைக்கு சென்று விட்டு வந்து இரவு நேரங்களில் போராட்டங்களை நடத்தி தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

மக்களை சந்தித்த திருமாவளவன்

அந்த வகையில் இன்று 55 வது நாளக ஏகனாபுரம் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர் . அதனை விசிக கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் இன்று பார்வையிட்டு அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டு வந்தார்.அப்போது பெண்கள் அவரின் காலில் விழுந்து கதறி அழுதனர்.

திருமாவளவன் காலில் விழுந்து கதறிய பெண்கள் | Women Fell At Thirumavalavan S Feet And Screamed

பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக அரசு இரட்டைக் கொள்கையை கையாளுகிறதா என கேள்வி எழுப்புவதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

1350 ஏக்கர் நீர்நிலை பகுதியில் அழித்தால் தான் விமான நிலையம் அமைக்க முடியும் எனில் பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் அரசு இரட்டை கொள்கையை கையாள்கிறதா என திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

திருமாவளவன் காலில் விழுந்து கதறிய பெண்கள் | Women Fell At Thirumavalavan S Feet And Screamed

ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் 100க்கும் மேற்பட்ட இந்து கோவில்கள் அழிப்பதும் ஆரோக்கியமானது அல்ல, சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்லும் கம்பன் நீர் கால்வாய் 7 கி.மீ அழிவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது.

ஆகவே இவற்றை கருத்தில் கொண்டு அரசு செயல் திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும், நிலப்பரப்பில் விமான நிலையம் அமைக்க மாற்றம் செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மக்களின் கோரிக்கைகளை முதல்வரிடம் அனைத்தும் எழுத்துப்பூர்வமாக சந்தித்து வழங்க இருப்பதாக தொல் திருமாவளவன் தெரிவித்தார்.

முன்னதாக மக்களிடையே தொல் திருமாவளவன் பேசும்போது நீங்கள் தொடர்ந்து போராட்டம் செய்தால் இந்த போராட்டம் வெற்றி அடையும். நீங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள் என கூறியது அப்பகுதியில் உள்ள மக்களிடையே பெரும் உற்சாகத்தை எழுப்பியது.