மகாதீபம்: திருவண்ணாமலையில் விழாக்கோலம் - உள்ளூர் விடுமுறை!
கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை விழாக்கோலம் கொண்டுள்ளது.
மகாதீபம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கடந்த 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா தொடங்கியது. அதன் படி பரணி தீபம் இன்று ஏற்றப்படுகிறது. அதனையடுத்து மகா தீபமும் ஏற்றப்படுகிறது.
இதில், இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மகா தீபத்திற்கு பயன்படுத்தப்படும் தீப கொப்பரைக்கு நேற்று முன்தினம் சிறப்பு பூஜை செய்யப்பட்டு மலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
விழாக்கோலம்
4500 லிட்டர் நெய் தீபத்திற்கு தேவையான காடா துணிகள் மழைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. இன்று மாலை ஆறு மணிக்கு 2, 6 68 அடி உயரமுள்ள கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.
40 லட்சம் வரையிலான பக்தர்கள் கலந்துக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முன்னிட்டு அம்மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.