தமிழகம் வேண்டாம்.. ஆந்திராவிற்கு போறோம் - கிராம மக்கள் பரபர அறிவிப்பு!

Chennai
By Sumathi Jun 16, 2024 04:07 AM GMT
Report

தமிழகத்தை விட்டு வெளியேறி ஆந்திராவிற்கு இடம் பெயரவுள்ளதாக கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.

வலுக்கும் போராட்டம்

பரந்தூரில் 2-வது விமான நிலையம் அமைய உள்ளது. இதற்காக பரந்தூர் மற்றும் அதனை சுற்றிய 20 கிராமங்களில் சுமார் 5746 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படவுள்ளது.

parandur protest

இதற்காக பரந்தூர், வளத்தூர், பொடவூர், நல்வாய், தண்டலம், மடப்புரம், ஏகானபுரம் உள்ளிட்ட கிராமங்களில் நில அளவீடு பணிகள் நடைபெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து, நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து பரந்தூர் சுற்று வட்டார மக்கள் கடந்த 2 ஆண்டுகளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கிராம சபை கூட்டங்களிலும் விமான நிலையத்துக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பரந்தூர் விமான நிலையம்..13 கிராமம் போராட்டம் - தற்காலிக வாபஸ்!

பரந்தூர் விமான நிலையம்..13 கிராமம் போராட்டம் - தற்காலிக வாபஸ்!

ஆந்திராவிற்கு தஞ்சம்

ஆனால் அரசு இதனை கண்டுகொள்ளாமல் உள்ளது. எனவே, போராட்டக்காரர்கள் தற்போது ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்ட அலுவலரை சந்திக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஆர்.எல்.இளங்கோ, “வேறு வழியே இல்லாமல்தான் வாழ்வதற்கு தஞ்சம் கேட்டு ஆந்திர மாநில அரசை அணுக உள்ளோம்.

தமிழகம் வேண்டாம்.. ஆந்திராவிற்கு போறோம் - கிராம மக்கள் பரபர அறிவிப்பு! | Parandur Protestors Warns To Move To Andhra

அதன் முதல்கட்டமாக ஜூன் 24-ம் தேதி சித்தூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க உள்ளோம். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி எங்கள் பிரச்சினையை தீர்ப்பார்கள் என்று நம்புகிறோம். இல்லையெனில் கண்ணீருடன் வெளியேறுவதை தவிர எங்களுக்கு வேறுவழியில்லை” எனத் தெரிவித்துள்ளார்.