பழங்குடியினர்களின் இடையே பயங்கர மோதல் - கொத்து கொத்தாக பறிப்போன உயிர்கள்!
பழங்குடியினர் இடையே நடந்த மோதலால் 64 பேர் உயிரிழந்துள்ளனர்.
நில தகராறு
பசிபிக் கடலில், இந்தோனேசியா அருகில் உள்ள பப்புவா நியூ கினியா எனும் தீவு உள்ளது. இந்த தீவில் அதிக அளவிலான பழங்குடியினர் வசித்து வருகின்றனர்.
இங்கு வசித்து வரும் பழங்குடியினர்களில் சிகின் மற்றும் கேகின் என இரு பிரிவின மக்கள் இடையே கடும் மோதல் நடைபெற்றுள்ளது.
64 பேர் பலி
இந்த இரு குழுவினர்களிடையே நிலம் சம்பந்த பட்ட தகராறு நீண்ட காலமாக இருந்து வந்த நிலையில் மக்கள் இடையே கடும் மோதலில் ஈடுப்பட்ட சுமார் 64 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து, முதல்கட்ட விசாரணையில் இரு பிரிவினர்களும் ஒருவருக்கொருவர் கடுமையாக துப்பாக்கிச்சூட்டால் தாக்கியுள்ளது தெரியவந்துள்ளது.
இதனால், அங்கு மிகவும் பதற்றமான சூழல் நிலவியுள்ளது. இந்நிலையில் இச்சம்பவம் குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிஸ்,
"பப்புவா நியூ கினியாவில் இருந்து வந்துள்ள இந்த செய்தி மிகவும் கவலை அளிக்கும் விதமாக உள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.