பழங்குடியினர் பட்டியலில் இனி இவர்களும்.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்

M K Stalin India
By Sumathi Sep 14, 2022 10:51 AM GMT
Report

பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர், குருவிக்காரர் பிரிவினரை சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.

பழங்குடியினர் பட்டியல்

நரிக்குறவர், குருவிக்காரர் மக்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், தமிழ்நாடு அரசின் பரிந்துரைகளின் அடிப்படையில், குருவிக்காரன் குழுவினருடன் இணைந்த நரிக்குறவன் சமூகத்தினரை,

பழங்குடியினர் பட்டியலில் இனி இவர்களும்.. மத்திய அமைச்சரவை ஒப்புதல் | Addition Of Narikuravar People To Tribal List

தமிழ்நாட்டின் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் திட்டத்திற்கு இந்திய தலைமைப் பதிவாளர் ஒப்புக் கொண்டுள்ளதாக, ஒன்றியப் பழங்குடியினர் விவகாரங்கள் துறையின் இயக்குநர் மத்திய அரசின் கடிதத்தின் மூலம் தெரிவித்திருந்ததை,

நரிக்குறவர்

பிரதமரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புவதாக குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக பல கோரிக்கைகள் அளிக்கப்பட்டிருந்தும், இந்த சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பது நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது என்றும் எனவே,

பழங்குடியினர் பட்டியலில் இனி இவர்களும்.. மத்திய அமைச்சரவை ஒப்புதல் | Addition Of Narikuravar People To Tribal List

இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, நரிக்குறவன், குருவிக்காரன் சமூகத்தினரை தமிழ்நாட்டிலுள்ள பழங்குடியினர் பட்டியலில் சேர்த்திட விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் முதல்வர் கேட்டுக்கொண்டிருந்தார்.

அமைச்சரவை ஒப்புதல்

இந்நிலையில் நரிக்குறவர், குருவிக்காரர் என அழைக்கப்படுபவர்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக மத்திய மந்திரி அர்ஜூன் முண்டா கூறியுள்ளார். சத்தீஸ்கர்,

இமாச்சலப்பிரதேச மாநிலங்களிலும் பழங்குடியினர் பட்டியலில் இணைப்புகளுக்கும் அனுமதி தரப்பட்டுள்ளது. பழங்குடியினருக்கு வழங்கப்படும் சலுகைகள் அனைத்தும் நரிக்குறவர் - குருவிக்காரர் பிரிவினருக்கும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.