Player Of The Month: ரிஷப் பந்துக்கு விருது
சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் ஜனவரி மாதத்திற்கான Player Of The Month விருதுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் தேர்வாகியுள்ளார். சர்வதேச அளவில் சிறப்பாக விளையாடும் வீரர்களை மாதந்தோறும் கௌரவிக்கும் விதமாக, Player Of The Month விருது வழங்கப்படும் என சர்வதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்திருந்தது.
இதன்படி ஜனவரி மாதத்துக்கான சிறந்த வீரர்களுக்கான பரிந்துரையாக இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த், இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட், அயர்லாந்து வீரர் பால் ஸ்டிர்ரிங் ஆகியோரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டனர். இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சிட்னி டெஸ்ட் போட்டியில் 97 ரன்கள் விளாசிய ரிஷப்பந்த் பிரிஸ்பேன் டெஸ்டில் 89 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இதையடுத்து, ஜனவரி மாதத்துக்கான சிறந்த வீரராக ரிஷப்பந்த் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதேபோல் மகளிர் கிரிக்கெட்டில் சிறந்த வீராங்கணையாக தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த பந்துவீச்சாளர் ஷப்னிம் இஸ்மாயில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிராக ஒருநாள் தொடரில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினால் இஸ்மெயில் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரானில் கொடூரம்: சிறையிலிருந்த காதலியுடன் திருமணம் முடித்து அடுத்த நொடியே மணமகனுக்கு மரணதண்டனை IBC Tamil
மின்சார கார் தீப்பிடித்ததில் குழந்தைகள் உட்பட 4 பேர் பலி: கண் இமைக்கும் நேரத்தில் கோர விபத்து IBC Tamil