அம்மாவின் ஆசியுடன் முதல்வராக இருந்த என்னை...தலையில் பலாப்பழம் சுமந்தபடி ஓபிஎஸ் பேச்சு!
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
பலாப்பழம் சின்னம்
தமிழகத்தில் மக்களவை தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் தீவிரமான வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் களமிறங்கியுள்ளனர்.
இந்நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இந்த தேர்தலில் ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக நிற்கிறார். பல்வேறு பாடங்களுக்கு பிறகு அவருக்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டது.
ஓபிஎஸ் பேச்சு
இதை தொடர்ந்து, ஓபிஎஸ் பலாப்பழ சின்னத்தில் வாக்குக் கேட்பில் ஈடுபட்ட போது அவர், பிரதமர் மோடி தமிழகத்திற்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்தார். அந்த நிதியை பெற்றுக் கொண்டு பாஜகவுக்கு துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி.
மத்திய அரசின் துணையுடன் 4 ஆண்டுகள் பழனிசாமி ஆட்சி செய்தார். அவரது ஆட்சி 4 ஆண்டுகளும் தொடர் தரை மட்டத்திற்கு சென்று ஆதரித்தேன். தமிழகத்திற்கு 11 மருத்துவக் கல்லூரிகள் கொண்டு வரப்பட்டன.
எனக்கு எதிராக 5 பன்னீர் செல்வங்களை தேடிப்பிடித்து களமிறக்கியுள்ளனர். எத்தனை பன்னீர் செல்வங்கள் போட்டியிட்டாலும் ஜெயலலிதாவின் ஆசியுடன் 3 முதல்வராக இருந்த என்னை மக்களுக்கு நன்றாகத் தெரியும் என்று தெரிவித்துள்ளார்.