வஞ்சகன் தினகரனோடு சேர்ந்து பாழாய் போய்விட்டார் OPS : ஜெயக்குமார் காட்டம்
ஓபிஎஸ் கோஷ்டியால் அதிமுக கட்சி ரீதியாக உள்ள 75 மாவட்டங்களில் ஏதாவது கூட்டமோ ஆர்பாட்டமோ நடத்த முடியுமா என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சவால் விடுத்துள்ளார்.
அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்
மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பாக கண்டண ஆர்ப்பாட்டம் நடத்தபட்டு வருகிறது , அந்த வகையில் வடசென்னை தெற்கு கிழக்கு மாவட்டங்களின் சார்பில் சென்னை பட்டாளத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், மக்கள் நல பிரச்னைகளில் கவனம் செலுத்தாமல் விளம்பரத்தில் கவனம் செலுத்தும் அரசாகவே திமுக அரசு செயல்படுவதாக குற்றம் சாட்டினார்.
பாழாய் போன ஓபிஎஸ்
தொடர்ந்து ஓபிஎஸ் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் கூறிய ஜெயக்குமார், ஓபிஎஸ் என்பவர் ஒரு கோஷ்டி, கட்சி அல்ல. கோஷ்டிக்கும் கட்சிக்கும் வித்தியாசம் உள்ளது.
அவருக்கு தொண்டர்கள் ஆதரவும் இல்லை.மக்கள் ஆதரவுமில்லை. வஞ்சகன் என்ற தினகரனோடு கூட்டுசேர்ந்து பாழாய் போய்விட்டார் ஓபிஎஸ். சீசன் பறவை போல ஒவ்வொரு கட்சியாக மாறுபவர்தான் என குற்றம் சாட்டினார்.
பண்ருட்டி ராமசந்திரனின் கருத்து குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த ஜெயக்குமார் : இது அவரின் தனிப்பட்ட கருத்து. அதிமுக சரியான பாதையில் சென்று கொண்டு இருக்கிறது, தொண்டர்கள் ஒற்றுமையாக உள்ளனர்.
ஓபிஎஸ் கோஷ்டியால் அதிமுக கட்சி ரீதியாக உள்ள 75 மாவட்டங்களில் ஏதாவது கூட்டமோ ஆர்பாட்டமோ நடத்த முடியுமா என்று சவால் விடுத்தார்.