7 பேரையும் விடுவிக்கவேண்டும் என்பதே அம்மா அரசின் உறுதியான நிலைப்பாடு- துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ட்வீட்

dead kill gandhi rajiv
By Jon Jan 25, 2021 02:11 PM GMT
Report

7 பேரையும் சிறையிலிருந்து விடுவிக்க சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு பரிந்துரைத்தது அரசு தான் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன், உள்ளிட்ட 7 பேர் 1991ஆம் ஆண்டு முதல் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்த 7 பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழக அமைச்சரவையில் கடந்த 2018-ஆம் ஆண்டு தீர்மானம் கொண்டுவரப்பட்டது ஆனால் இந்த தீர்மானத்துக்கு தமிழக ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை.

ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. இதற்கிடையே பேரறிவாளன் விடுதலை குறித்து முடிவெடுக்க ஆளுநருக்கு ஒரு வாரம் அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த நிலையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பதிவில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்யவேண்டும் என்பதே அம்மா அரசின் உறுதியான நிலைப்பாடு ena விரைவில் நல்ல தீர்வு வரும் என எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.