இன்றைய ஸ்பெஷல்.. வறுத்த எறும்பு பானிபூரி.. சாப்பிட தயாரா? வைரலாகும் வீடியோ!
வறுத்த எறும்பு பானிபூரி வீடியோ ஒன்று இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது.
பானிபூரி..
தாய்லாந்தை சேர்ந்த சமையல் கலைஞர்கள் பானிபூரியில் சுவையை கூடுதலாக்க வறுத்த எறும்புகளை சேர்த்து வினோத முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் இந்திய தயாரிப்பு பானிபூரியை, தங்கள் பாரம்பரியம் கலந்து தயாரித்து புதுமைப்படுத்த விரும்பி உள்ளனர்.
அதற்காக பானிபூரி கலவை தயாரிக்க தக்காளி, புளித்த பீன்ஸ், தேங்காய்ப்பால் மற்றும் மல்லி இலை உள்ளிட்ட நறுமண பொருட்களை சேர்த்தனர். கூடுதலாக கொட்டும் சிவப்பு எறும்புகளை வறுத்து பூரியின் மேல் தூவி அழகாக அலங்கரித்து சாப்பிட கொடுக்கிறார்கள்.
வறுத்த எறும்பு
பாங்காக்கில் உள்ள பிரபல உணவு விடுதியில் இந்த எறும்பு பானிபூரி வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் பயன்படுத்தப்பட்ட சிவப்பு எறும்புகளை அவர்கள், சத்தீஸ்கரில் இருந்து வரவழைப்பதாக தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளப்பக்கத்தில் வேகமாக பரவி வந்தது. அதை பார்த்த இந்திய பானிபூரி ரசிகர்கள், அவர்களுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளனர். இருப்பினும் தாய்லாந்து உணவுப் பிரியர்களிடம்,
இந்த பானிபூரிக்கு வரவேற்பு கிடைத்து உள்ளதாம். சத்தீஸ்காரில் பழங்குடியினரின் உணவுப் பழக்கவழக்கத்தில் சிவப்பு எறும்புகளை அதிகமாக பயன்படுத்தப்படுவது என்பது குறிப்பிடத்தக்கது.