பானிபூரி பிரியரா நீங்கள்? புற்றுநோய் அபாயம் - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்
பானிபூரியில் புற்றுநோயை ஏற்படுத்தும் நிறமிகள் கலக்கபடுவது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
பானிபூரி
பானிபூரிக்கு உணவு பிரியர்கள் மத்தியில் பெரும் ரசிகர் கூட்டம் உண்டு. கர்நாடக மாநிலத்தில் உள்ள தெருவோர கடைகளில் FSSAI அதிகாரிகள் உணவு தரம் குறித்து சோதனை மேற்கொண்டனர்.
260 மாதிரிகளில், 41 மாதிரிகளில் புற்றுநோயை ஏற்படுத்தும் செயற்கை வண்ணங்கள் மற்றும் புற்றுநோயை ஏற்படுத்தும் காரணிகள் கண்டறியப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மற்ற 18 மாதிரிகள் மனித நுகர்வுக்கு தகுதியற்றவை என்று தெரிய வந்துள்ளது.
இது குறித்து பேசிய உணவு பாதுகாப்பு ஆணையர், மாநிலம் முழுவதும் தெருக்களில் விற்கப்படும் பானி பூரியின் தரம் குறித்து எங்களுக்கு பல்வேறு புகார்கள் வந்தன. இதனையடுத்து, மாநிலம் முழுவதிலுமிருந்து சாலையோர கடைகளில் இருந்து உணவகங்களின் மாதிரிகளை சேகரித்தோம்.
தமிழக அரசு
பல மாதிரிகள் பழமையான நிலையில் மற்றும் மனித நுகர்வுக்கு தகுதியற்றவை என்று கண்டறியப்பட்டன. பானிபூரி மாதிரிகளில் brilliant blue, sunset yellow மற்றும் tartrazine போன்ற ரசாயனங்கள் காணப்பட்டன, அவை பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கோபி மஞ்சூரியன் மற்றும் பஞ்சு மிட்டாய் போன்ற உணவுகளில் பரவலாகப் பயன்படுத்தப்படும் ரோடைமைன் -பி’ என்ற செயற்கை நிறமூட்டிகள் பயன்படுத்தப்பட்டதை கண்டறிந்து சமீபத்தில் கர்நாடக அரசு தடை செய்தது. கடந்த பிப்ரவரி மாதம், தீங்கு விளைவிக்கும் ரோடமைன்-பி மற்றும் ஜவுளி சாயம் ஆகியவை பஞ்சு மிட்டாயில் பயன்படுத்தப்படுவதை கண்டறிந்து அதன் விற்பனைக்கு தமிழக அரசு தடை விதித்தது.