பிரதமர் மோடி போல் தோற்றமளிக்கும் பானி பூரி வியாபாரி - ஏமாந்து போகும் வாடிக்கையாளர்கள்!
பிரதமர் மோடி போல் தோற்றமளிக்கும் பானி பூரி வியாபாரியிடம் வாடிக்கையாளர்கள் செல்பி எடுத்து செல்கின்றனர்.
மோடியின் தோற்றம்
குஜராத் மாநிலம் ஆனந்த் நகரில் பானி பூரி விற்பனை செய்பவர் அனில் பாய் தக்கர்தான் (71). இவர் பிரதமர் நரேந்திர மோடியின் தோற்றம் கொண்டுள்ளார். அத்துடன் பிரதமர் மோடியை போல உடை, கண்ணாடி, சிகையலங்காரம் ஆகியவற்றை செய்து பிரபலமாகிவிட்டார்.
இதனால் அனில் பாயின் கடைக்கு புதிதாக வருபவர்கள் சற்று ஏமாந்து விடுகிறார்கள். ஏனெனில் அவரது தோற்றம் மோடியின் முகத்தோற்றத்துடன் ஒத்துப் போகிறது. இந்நிலையில் வாடிக்கையாளர்கள் பலர் அவரிடம் வந்து பானிபூரி சாப்பிட்டு விட்டு செல்பி எடுத்துச் செல்கின்றனர்.
அன்புக்கு நன்றி
பிரதமர் மோடியின் தீவிர ரசிகருமான அனில் பாய், ஸ்வச் பாரத் அபியான் மூலம் ஈர்க்கப்பட்டு, தனது கடை மற்றும் சுற்றியுள்ள பகுதியின் தூய்மைக்கு முன்னுரிமை கொடுத்து வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் "மக்கள் பிரதமர் மோடியின் தோற்றத்தை மிகவும் விரும்புகின்றனர். உள்ளூர் மற்றும் சுற்றுலாப் பயணிகள் என்னிடம் செல்பி எடுப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. அவர்களது அன்புக்கும், நம்பிக்கைக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.