மூட்டை தூக்கும் முன்னாள் அமைச்சர்; வைரலாகும் வீடியோ - என்ன நடந்தது?
முன்னாள் அமைச்சர் ஒருவர் மூட்டை தூக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கமலக்கண்ணன்
புதுச்சேரி மாநில முன்னாள் வேளாண் துறை மற்றும் கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் கமலக்கண்ணன். காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தொகுதியை சேர்ந்த இவர், விவசாயத்தை பூர்வீக தொழிலாக கொண்டவர்.
இவர் அமைச்சராக இருக்கும்போதே தனது நெல் வயலை உழுதல், விதை தெளித்தல், களை எடுத்தல், நாற்று நடுதல் உள்ளிட்ட விவசாயப் பணிகளை செய்துவந்தார். அதேபோல் சாதாரண வேலைகளை எந்தவித தயக்கமும் இன்றி, வேலையாட்கள் இல்லாமல் செய்துவருவது அவரது வாடிக்கை.
வைரலாகும் வீடியோ
இந்நிலையில் கமலக்கண்ணன் தனது வயலில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை, தனியார் நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்வதற்காக கொண்டு சென்றார். அப்போது பணியாட்கள் குறைவாக இருந்ததால் அவரும் சேர்ந்து நெல் மூட்டைகளை தலையில் சுமந்து இறக்கி வைத்தார்.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கமலக்கண்ணன் கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் திருநள்ளாறு தொகுதியில் வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
*எளிமையாக மாறிய முன்னாள் அமைச்சர்*
— எம். சின்னத்தம்பி (@cinnattampi) April 27, 2024
கைலி, பனியனுடன் நெல் மூட்டை தூக்கும் புதுச்சேரி முன்னாள் வேளாண் துறை அமைச்சர் கமலக்கண்ணன்
2016- 21 காங்கிரஸ் அமைச்சரவையில் வேளாண்மைத்துறை அமைச்சராக இருந்தவர் pic.twitter.com/EpG2o5BD20