அந்த இடத்திற்கு எக்ஸ்ட்ரா கவனிப்பு ரொம்ப முக்கியம் - நடிகை சுஜிதா ஓபன்டாக்
சீரியல் நடிகை சுஜிதா ஸ்கின் கேர் குறித்து பல தகவல்களை பகிர்ந்துள்ளார்.
நடிகை சுஜிதா
விஜய் டி.வி. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனமாக நடித்து பிரபலமானவர் சுஜிதா தனுஷ்(40). நடிப்பது மட்டுமின்றி அவர் பல நடிகைகளுக்கு மலையாளத்தில் டப்பிங் பேசி வருகிறார்.
இன்றும் அதே இளமையுடன், பொலிவுடனும் இருக்கிறார். இந்நிலையில், சரும பராமரிப்பு குறித்து அவர் கூறுகையில், ’ஓவர் நைட்ல எந்த பலனுமே கிடைக்காது, நீங்க வாழ்க்கை முழுக்க தொடர்ந்து பண்ணும்போதுதான் அதுக்கான ரிசல்ட் ஒரு 2-3 மாசத்துல தெரியும்.
ஸ்கின் கேர்
நான் பச்சை தண்ணீர்ல தான் ஃபேஸ் வாஷ் பண்ணுவேன். ஃபேஸ் வாஷ் மட்டும்தான் யூஸ் பண்ணுவேன். அப்புறம் க்ளென்சர் போட்டு முகத்தை நல்ல மசாஜ் பண்ணனும், பிறகு ஒரு நல்ல காட்டன் துணிய நனைச்சு, க்ளென்சர் மேல தேய்க்கும்போது நம்ம முகத்துல இருக்கிற துளைகள் ஓபன் ஆயிடும்.
வைட்டமின் சி சீரம்’ 4-5 டிராப்ஸ் எடுத்து’ முகத்துல அப்ளை பண்ணுங்க. இதுக்கு பிறகு அண்டர் ஐ கீரிம், கண்ணுக்கு கீழே நல்ல தடவுங்க. அதுக்கு எக்ஸ்ட்ரா கவனிப்பு ரொம்ப ரொம்ப தேவை. அப்புறம் மாய்ஸ்சரைசர் போடுவேன். இது சருமத்தை ஹைட்டிரேட் செய்ஞ்சு, மிருதுவாக்கும்.
கண்டிப்பா சன் ஸ்கீரின் லோஷன் யூஸ் பண்ணுவேன். இதேதான் இரவும் நான் பண்ணுவேன். மாய்ஸ்சரைசர் இரண்டு லேயர் அப்ளை பண்ணுவேன். ஆனா சன்ஸ்கீரின் போடமாட்டேன்.
தொடர்ந்து பண்ணுங்க, கண்டிப்பா உங்க சருமம் ஆரோக்கியமா இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.