திடீரென விஜே சித்ராவின் வீடியோவை வெளியிட்ட ஹேமா - ரசிகர்கள் உருக்கம்!
சித்ராவின் வீடியோ ஒன்றை பதிவிட்டு ஹேமா வருத்தம் தெரிவித்துள்ளார்.
நடிகை ஹேமா
விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ஹேமா ராஜ்குமார் நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அவர், அவ்வப்போது தனது புகைப்படங்களை பகிர்ந்து வருவார். இதன் மூலம் அவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
நினைவு நாள்
இந்நிலையில், தனது சக நடிகையான விஜே சித்ராவின் வீடியோ ஒன்றை பதிவிட்டு அவரது நினைவுகளை நினைவு கூர்ந்துள்ளார். 3 வருடமாகிவிட்டது. நாங்கள் உன்னை மிஸ் செய்கிறோம் எனக் குறிப்பிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் தங்கள் வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர்.
பிரபல விஜேவாக இருந்து சின்னத்திரை நடிகையாக புகழ் பெற்றவர் சித்ரா. விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மிகவும் பிரபலமானார்.
இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை நசரத்பேட்டையில் உள்ள ஹோட்டலில் தனது காதல் கணவருடன் தனியார் ஹோட்டல் அறையில் இருந்த போது துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி பொதுமன்னிப்பு கிடைத்தால் ஏனைய புதைகுழிகளை அடையாளம் காட்டுவேன்! CID-யிடம் சோமரத்ன ராஜபக்ச அறிக்கை IBC Tamil
December 2026 Horoscope: தொட்டதெல்லாம் வெற்றியாகும் டாப் 4 ராசிக்காரர்கள்! உங்க ராசியும் இருக்கா? Manithan