வி.ஜே.சித்ரா கழுத்துல பல்லால் கடிச்சி இருக்கான் - திடுக்கிடும் ஆதாரங்களை வெளியிட்ட பெற்றோர்..!

Tamil Nadu Police V. J. Chitra
3 நாட்கள் முன்

நடிகை சித்ரா மரணத்தில் அரசியல்வாதிக்கு தொடர்பு இருப்பதாக அவரது கணவர் ஹேம்நாத் பரபரப்பு புகார் அளித்திருந்தார்.

ஹேம்நாத் பொய் கூறுவதாக சித்ராவின் தாயார் கூறியுள்ளார்.மேலும் சித்ராவின் மரணத்திற்கு ஹேம்நாத் தான் காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.

வி.ஜே.சித்ரா கழுத்துல பல்லால் கடிச்சி இருக்கான் - திடுக்கிடும் ஆதாரங்களை வெளியிட்ட பெற்றோர்..!

பிரபல விஜேவாக இருந்து வந்த சின்னத்திரை நடிகையாக புகழ் பெற்றவர் சித்ரா. விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மிகவும் பிரபலமானார்.

இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை நசரத்பேட்டையில் உள்ள ஹோட்டலில் தனது காதல் கணவருடன் தனியார் ஹோட்டல் அறையில் இருந்த போது துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சித்ரா தற்கொலை தொடர்பாக கணவர் ஹேம்நாத் மற்றும் அவரின் தாய் கொடுத்த மனஅழுத்தமே காரணம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அடுத்தடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் சித்ராவின் கணவர் ஹேம்நாத் மதுபோதையில் படப்பிடிப்பு தளத்துக்குச் சென்று சித்ராவிடம் பிரச்சனை செய்தது தெரியவந்தது.

இதனால் ஹேம்நாத்தை விட்டு பிரிந்து வருமாறு அவரது தாய் விஜயா சித்ராவிடம் தெரிவித்ததாகவும்,இருவரால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக சித்ரா தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் சித்ராவின் செல்ஃபோனில் இருந்த எஸ்.எம்.எஸ்,புகைப்படங்கள்,ஆடியோ போன்ற ஆதாரங்கள் அழிக்கப்பட்டது சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதனிடையே அரசியலில் முக்கிய அந்தஸ்தில் உள்ள சிலருக்கு சித்ராவின் மரணத்தில் தொடர்பு உள்ளது என்றும், சித்ராவின் தற்கொலைக்கு பின்னால் பண பலம்,அரசியல் பலம் கொண்ட மாஃபியா கும்பல் இருக்கிறது.

அவர்கள் யார் என்று வெளிப்படுத்தினால் என் உயிருக்கு ஆபத்து உண்டாகும் என அந்த கும்பல் மிரட்டுகிறது. என் மீது சுமத்தப்பட்ட பழியை போக்கும் வரை நான் உயிரோடு வாழ விரும்புவதாகவும்,உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என ஹேம்நாத் போலீசில் புகார் அளித்தார்.

வி.ஜே.சித்ரா கழுத்துல பல்லால் கடிச்சி இருக்கான் - திடுக்கிடும் ஆதாரங்களை வெளியிட்ட பெற்றோர்..!

இந்த வழக்கு தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க காவல்துறை உத்தரவிட்ட நிலையில் தற்போது இந்த விவகாரம் புயலை கிளப்பி வருகிறது.

சித்ரா கணவர் ஹேம்நாத் உண்மையை கூறுகிறாரா அல்லது வழக்கில் இருந்து தப்பிக்க இப்படி பேசுகிறாரா என பல்வேறு யூகங்கள் வெளியாகி வருகிறது.

சித்ரா இறந்து ஓராண்டு ஆன நிலையில் ஹேமந்த் தற்போது சித்ராவை பற்றி அவதூறு பரப்பி வருவது ஏன்? இவ்வளவு நாட்களாக கோமாவில் இருந்தாரா அல்லது குடித்துவிட்டு போதையில் இருந்தாரா? இப்போது ஏன் பேச வேண்டும்?.

சித்ராவின் மரணத்தில் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு உண்டு என்பது அவனுக்குதான் தெரியும் என அவரது பெற்றோர் பரபரப்பு புகார் அளித்தனர்.

இது பேசிய அவரது தாயார் வசந்தா, சித்ராவின் மரண வழக்கு நேர்மையாக நடைபெற முதல்வர் தலையிட வேண்டுமென கோரிக்கை விடுத்தார் சித்ரா மரணம் தற்கொலையா? கொலையா என்று பலரும் பேசிவரும் நிலையில்,

சித்ராவின் பிரேத பரிசோதனை அறிக்கையின் முதற்கட்ட தகவலின் படி அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும்,அவர் கன்னத்தில் இருந்த நகக்கீறல் அவருடையது தான் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

விஜே சித்ரா தொடர்பாக நாளுக்கு நாள் வெளியாகும் தகவல்களால் சித்ராவின் தற்கொலை விவகாரம் மீண்டும் பூகம்பம் போல் வெடித்துள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.