தவெக முதல் மாநாடு..பணிகள் விறுவிறூப்பு - பந்தக்கால் நடும் விழா எப்போது?
தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாட்டுக்கு பந்தக்கால் நடும் விழா நடைபெறவுள்ளது.
முதல் மாநாடு..
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு வருகிற அக்டோபர் 27ம் தேதி நடைபெற இருக்கிறது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் அன்றைய தினம் மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.
இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாநாட்டில் பங்கேற்கும் நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதேபோல் தொண்டர்களுக்கும் பல்வேறு அறிவுறுத்தல்களை கட்சித் தலைமை வழங்கி வருகிறது.
இந்த மாநாட்டின்போது எந்த சூழலிலும் கட்சிக்கு அவப்பெயர் வந்துவிடக் கூடாது என்றும், அதற்கேற்ப நடந்துகொள்ள வேண்டும் என்றும் நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் அக்கட்சித் தலைவர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.
பந்தக்கால் நடும் விழா
அதோடு, மாநாட்டிற்கு ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் குறைந்தபட்சம் 10 ஆயிரம் பேரையாவது அழைத்து வர வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக மாவட்ட வாரியாக குழுக்கள் அமைக்கப்பட்டு,
தொண்டர்களை பாதுகாப்பாக அழைத்துவர பேருந்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், மாநாட்டுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பந்தக்கால் நடும் விழா நாளை நடைபெறுகிறது.
காலை 4 மணி முதல் 6 மணிக்குள் பந்தல் கால் நடப்படுகிறது. இதில் தவெக தலைவர் விஜய் பங்கேற்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வுக்கு பிறகு, மாநாட்டுக்கு பிரம்மாண்ட பந்தல் மற்றும் அமைக்கும் பணிகள் தொடங்கவுள்ளது.