இப்படித்தான் முத்தம் கொடுப்பார்களா - ராகுல் காந்தி மீது அமைச்சர் கடும் தாக்கு !
பாண்டவர்கள் இப்படித்தான் தங்கைக்கு முத்தம் கொடுப்பார்களா என உத்தரப்பிரதேச அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாச முத்தம்
ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணம் என்று கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீரில் முடிவடைய நாடு முழுவதும் நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இடையில், காசியாபாத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தியும் அவரது தங்கையும் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தியும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
அப்போது மேடையில், ராகுல் காந்தி தனது அருகே அமர்ந்திருந்த தங்கை பிரியங்கா காந்திக்கு பாசத்துடன் முகத்தை அழுத்தி பிடித்து கன்னத்தில் முத்தம் கொடுத்தார். மீண்டும் மீண்டும் ராகுல் காந்தி, தங்கையின் கன்னத்தில் முத்தம் கொடுக்க வந்த போது, போதும் என்று சொல்லி சிரித்தார்.
அமைச்சர் தாக்கு
இந்த வீடியோ வைரலானது. இந்நிலையில், உத்தரப்பிரதேச அமைச்சர் தினேஷ் பிரதாப் சிங் ஆர். எஸ். எஸ் அமைப்பினர் கௌரவர்கள் என்றால் ராகுல் காந்தி பாண்டவரா? எந்த பாண்டவராவது தனது தங்கையை ராகுல் காந்தி போன்று பொது இடத்தில் முத்தமிடுவாரா?
இது நமது கலாச்சாரம் கிடையாது. இது போன்ற செயல்களுக்கு இந்திய கலாச்சாரம் அனுமதி கொடுப்பது இல்லை. இதனால் லேபரேலியிலிருந்து வெளியேறும் கடைசி வெளிநாட்டவராக இருப்பார் சோனியா காந்தி எனச் சாடியுள்ளார்.