ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை விரட்டி நடுரோட்டில் சரமாரியாக வெட்டிய கும்பல் - கொடூர கொலை!

Attempted Murder Cuddalore
By Vinothini Jun 28, 2023 06:17 AM GMT
Report

கடலூரில் ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஊராட்சி தலைவர்

கடலூர், தாழங்குடாவைச் சேர்ந்தவர் மதியழகன், இவர் மீனவராக உள்ளார். இவரது மனைவி சாந்தி, இவர் ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளார். கடந்த 2020-ம் ஆண்டு நடந்த மதிவாணன் கொலை வழக்கில் சிறைக்கு சென்றார், இவர் தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

panchayat-presidents-husband-killed-by-a-gang

இவர் ஊருக்குள் செல்லாமல் கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கி இருந்தார். அப்பொழுது அவர் வீட்டில் இருந்து வெளியே வந்தபொழுது 7 பேர் கொண்ட கும்பல் கத்தி, அரிவாளுடன் அவரை விரட்டியுள்ளனர்.

கொலை

இந்நிலையில், அந்த கும்பல் அவரை விரட்டி பிடித்து நடுரோட்டில் வைத்து சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். பின்னர் அப்பகுதி மக்கள் அங்கு திரண்டதும் அந்த கும்பல் கத்தி, அரிவாளை அங்கேயே விட்டு தப்பி சென்றனர்.

panchayat-presidents-husband-killed-by-a-gang

அதன்பிறகு தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்ட மதியழகன் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த கொலைக்கு பழிவாங்கும் நோக்கம் தான் காரணமா இல்லை வேறேதும் காரணம் உள்ளதா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.