50 ஆயிரத்திற்கு மேல் 2000 நோட்டுகளை மாத்தனுமா? கண்டிப்பா இது முக்கியம்!

India
By Sumathi May 23, 2023 10:42 AM GMT
Report

2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றுவது தொடர்பாக முக்கிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

2000 நோட்டு

கடந்த 2016ம் ஆண்டு வழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் அனைத்தும் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதாக கூறப்பட்ட இந்த நடவடிக்கை காரணமாக தற்போது டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்து இருக்கிறது.

50 ஆயிரத்திற்கு மேல் 2000 நோட்டுகளை மாத்தனுமா? கண்டிப்பா இது முக்கியம்! | Pan Card Mandatory Changing Rs 2000 Notes In Banks

அப்போது 1000 ரூபாய்க்கு பதிலாக 2 ஆயிரம் ரூபாய் அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் தான் தற்போது 2000 ரூபாயும் திரும்ப பெறப்பட்டுள்ளது. பண புழக்கத்தில் 10.8 சதவிகிதம் மட்டும் 2000 ரூபாய் நோட்டுகள் உள்ளன. இதன் தேவை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

பான் முக்கியம்

2000 ரூபாய் இல்லாமலே பணப்புழக்கம் முறையாக உள்ளது. அதனால் இப்போது இதை திரும்ப பெறுவதாக ஆர்பிஐ அறிவித்துள்ளது. அதன்படி, 20 ஆயிரம் ரூபாய் வரை எந்த ஆவணங்களும் இல்லாமல் வங்கிகளில் 2000 நோட்டுகளை மாற்ற முடியும்.

50 ஆயிரத்திற்கு மேல் 2000 நோட்டுகளை மாத்தனுமா? கண்டிப்பா இது முக்கியம்! | Pan Card Mandatory Changing Rs 2000 Notes In Banks

வங்கி கணக்கில் ரூ.50 ஆயிரம் அல்லது அதற்கு மேல் டெபாசிட் செய்தால், வருமானவரி தேவைக்காக 'பான்' எண்ணை குறிப்பிடுவது நடைமுறையில் இருக்கிறது. 2,000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி, ரூ.50 ஆயிரம் டெபாசிட் செய்வதற்கும் அது பொருந்தும்.

1,000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் அறிமுகம் செய்யும் திட்டம் தற்போதைக்கு இல்லை என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.