கடலை ரசித்த படி மீண்டும் ரயில் பயணம்; புதிய பாம்பன் பாலம் - அப்டேட் இதோ!
புதிய பாம்பன் ரயில் பாலம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பாம்பன் ரயில்
ராமநாதபுரம், பாம்பன் கடலில் ரூ.550 கோடி செலவில் 2.8 கிலோமீட்டர் தொலைவிற்கு கடந்த 2020-ம் ஆண்டு முதல் நான்கு வருடங்களாக நடைபெற்று வருகிறது.
கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தூக்கு பாலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு ரயில் சேவை, பாம்பன் கடலுக்கு முன்பு உள்ள மண்டபம் வரையிலும் நிறுத்தப்பட்டுள்ளது.
முக்கிய தகவல்
தொடர்ந்து, நவீன வசதிகளுடன் 2.8 கிலோமீட்டர் தொலைவிற்கு நடுவில் கப்பல்கள் சென்று வருவதற்கு ஏற்ப செங்குத்து பாலத்துடன் புதிய ரயில் பாலம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கப்பல் கடந்து செல்லும்போது செங்குத்து பாலம் லிஃப்ட் போன்று ஹைட்ராலிக் இயந்திரம் மூலம் 17 மீ உயரத்திற்கு மேல்நோக்கி செல்லும்.
இதற்காக மையப்பகுதியில் நான்கு தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பணிகள் முடிந்து 700 டன் எடை உடைய செங்குத்து பாலம் பொருத்தி மற்ற பகுதிகளுக்கும் கர்டர்கள் அமைத்து விட்டால் முடிந்துவிடும்.
தற்போது, 1.6 கிலோ மீட்டர் தூரத்திற்கு 100 சதவீதப்பணிகள் நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில், பணிகள் அனைத்தும் நிறைவுபெற்று, ரயில் சேவை புதிய பாலத்தில் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.