மீண்டும் பாம்பன் பாலத்தில் நேருக்கு நேர் மோதிய அரசு பேருந்துகள்
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில், இன்று அதிகாலை ராமேஸ்வரத்திலிருந்து ராமநாதபுரம் நோக்கி சென்ற அரசுப்பேருந்தும், திருச்சியிலிருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்ற அரசுப்பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
பேருந்து விபத்து
ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 20 பயணிகள் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்துக்கு நாள்தோறும் வெளி மாவட்டம் மற்றும் மாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்த வண்ணம் இருக்கின்றனர். ராமேஸ்வரம் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் சுற்றிப் பார்க்கக் கூடிய இடமாகும்.
இரண்டாவது முறையாக விபத்து
இங்கு உள்ள சுற்றுலாதளங்களை சுற்றி பார்த்த பின்பு பாம்பன் சாலை பாலத்தில் இருந்து கடல் அலையை ரசிப்பதற்காக சுற்றுலாப் பயணிகள் தங்களுடைய வாகனங்களை சாலைப் பாலத்தின் இரு புறங்களின் நிறுத்தி வைக்கின்றனர். இதனால் அவ்வப்போது பாலத்தில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளும் நேர்ந்து வருகிறது.
இந்நிலையில்,ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில், இன்று அதிகாலை ராமேஸ்வரத்திலிருந்து ராமநாதபுரம் நோக்கி சென்ற அரசுப்பேருந்தும், திருச்சியிலிருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்ற அரசுப்பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்ததில் 2 பேருந்துகளின் ஓட்டுநர்கள் உட்பட 20 பேர் படுகாயமடைந்தனர். விபத்தில் நடைபெற்ற இடத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 10 நாட்களில் பாம்பன் பாலத்தில் 2வது முறையாக விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.