39 நாட்களில் நிரம்பிய பழனி முருகன் கோயில் உண்டியல்கள் - மெய்சிலிர்க்கும் சுவாரஸ்ய தகவல்!
பழனி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை என்னும் பணிகள் இன்று நடைபெற்றது.
பழனி
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடாக உள்ளது பழனி முருகன் கோயில். இக்கோவில் உலகப் பிரசித்தி பெற்றது .
இந்த கோவிலுக்கு சாமி தரிசனம் செய்யத் தமிழகத்திலிருந்து மட்டுமின்றி அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிகின்றனர்.
பழனி முருகன் கோவிலில் இந்து அல்லாதோர் நுழைய தடை; அறிவிப்பு பதாகையை மீண்டும் வைக்க நீதிமன்றம் உத்தரவு!
சாதாரண நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களும், விடுமுறை மற்றும் விஷேச நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்களும் வருகை தருவது வழக்கம். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் பழனியில் தமிழக அரசு சார்பில் முத்தமிழ் முருகன் மாநாடு நடத்தப்பட்டது.
உண்டியல் காணிக்கை
அப்போது தொடர் விடுமுறை காரணமாகப் பழனியில் பக்தர்களின் வருகை அதிகரித்துக் காணப்பட்டது. அதுமட்டுமில்லாமல் வெளிநாடுகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். இதன்மூலம், கோயிலில் உள்ள உண்டியல்கள் 39 நாட்களில் நிரம்பின.
இதனைத் தொடர்ந்து, கோவில் நிர்வாகம் சார்பில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி இன்று தொடங்கியது.இதில் 3 கோடியே 32 லட்சம் ரூபாய் ரொக்கம் கிடைத்தது.
மேலும், தங்கத்தாலான வேல், தாலி, மோதிரம், சங்கிலி, தங்கக்காசு ஆகியவற்றையும், வெள்ளியாலான காவடி, வளையம், வீடு, தொட்டில், கொலுசு, பாதம் ஆகியவற்றையும் காணிக்கையாகச் செலுத்தியிருந்தனர். இதன் மதிப்பு 1கோடி எனத் தெரிவிக்கப்பட்டது.