அபசகுனம்? பழநி முருகன் கோயிலில் பரிகார பூஜை - ராஜகோபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்!

Temple Trees Dindigul Murugan
By Vidhya Senthil Oct 01, 2024 12:56 PM GMT
Report

  பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயில் ராஜகோபுரம் சேதமடைந்துள்ள சம்பவம் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  பழநி 

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடு தான் திண்டுக்கல் ம்,மாவட்டத்தில் அமைந்துள்ள பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயில்.

palani

இந்த கோவிலுக்குத் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களிலிருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். ஆண்டுதோறும் முருகப் பெருமானுக்கு உகந்த நாளான தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

திருவள்ளூரில் பார்க்க இவ்வளவு இடங்கள் இருக்கா? இது தெரியாமல் போச்சே..!

திருவள்ளூரில் பார்க்க இவ்வளவு இடங்கள் இருக்கா? இது தெரியாமல் போச்சே..!

இந்த நிலையில் கடந்த 16 ஆண்டுகளுக்குப் பிறகு 2023 ஆம் ஆண்டு ஜனவரி 27-ம் தேதி கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. கும்பாபிஷேகம் நடந்து ஒன்றரை ஆண்டுகளே ஆன நிலையில் தற்போது ராஜகோபுரத்தின் உச்சியில் ஒரு பகுதி உடைந்து சேதமடைந்துள்ளது.

அதிர்ச்சி

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் கோபுரத்தைச் சீரமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இதுகுறித்து கோயில் அதிகாரிகள் கூறும்போது, “ராஜகோபுரத்தில் உச்சியில் ஒரு பகுதி சேதமானது உண்மை தான்.

murugan temple

அப்பகுதியைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ராஜ கோபுரம் சேதமானதால் பரிகார பூஜை மற்றும் கோபுர சீரமைப்புக்குப் பின் சிறிய அளவில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கும் திட்டமிட்டுள்ளோம். கோயில் கோபுரம் சேதம் குறித்து பக்தர்கள் கவலைப்பட வேண்டாம். கோபுரம் சீரமைக்கப்பட உள்ளது.” என்றனர்.