திருவள்ளூரில் பார்க்க இவ்வளவு இடங்கள் இருக்கா? இது தெரியாமல் போச்சே..!
தமிழகத்தின் வடக்கு எல்லையில் அமைந்துள்ளது திருவள்ளூர். சென்னை மாநகரத்தோடு சேர்ந்தாற்போல் இருப்பதாலேயே பல சிறப்புகளையும், வளர்ச்சிகளையும் அடைந்து வருகிறது. கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், மத நிறுவனங்கள், சிறந்த கோயில்கள் என, பழம் பெருமைகளோடு, நவீன வளர்ச்சியிலும் தமிழகத்தின் கேந்திரமாக திகழ்கிறது.
திருத்தணி
திருத்தணி முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்று. குமரன் கோபம் தணிந்து, தன் தேவியருடன் இந்தக் குன்றில் அமர்ந்ததால், திருத்தணிகை என்று பெயர் வந்ததாகக் கூறுவதுண்டு. மலையடிவாரத்தில் உள்ள குமாரதீர்த்தம் புகழ்பெற்றது. 365 திருப்படிகளைக் கொண்டது திருத்தணி மலைக்கோயில்.
பழவேற்காடு
கடல் நீரும், பக்கிங்காம் கால்வாய் நீரும் ஒன்றுடன் ஒன்று கலக்கும் உப்பேரி. மீன்வளமும், இறால் வளமும் உள்ள ஏரி இது என்பதால் கடல் நீரை உள்வாங்குவதும், வெளித்தள்ளுவதுமாக இருப்பதால், இதை உப்பாறு என்று அழைக்கிறார்கள். இங்கு கிடைக்கும் நண்டு ஏற்றுமதி செய்யுமளவுக்கு தரமானது. பழவேற்காடு ஏரி, ஒரு பறவைகள் சரணாலயமும் கூட.
பஞ்சமுக ஆஞ்சநேயர்
பெரியகுப்பம் கிராமத்தில் மிகப் பிரம்மாண்டமான 32 அடி உயரமுள்ள, ஸ்ரீவிஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் சுவாமி சிலையானது, அமைந்திருக்கிறது. ஒரே கல்லில் ஆனது. பச்சை நிறத்தில் இருக்கும் இந்த சிலை தென்னிந்தியாவில் மிகவும் புகழ்பெற்றது.
திருவேற்காடு
திருவேற்காடு எனும் பெயருக்கு தெய்வீக மூலிகைகள்(வேர்கள்) நிறைந்த வனம் என்பது பொருளாகும். தற்போது திருவேற்காடு பகுதி தேவி கருமாரியம்மன் கோயிலுக்காக புகழுடன் அறியப்படுகிறது. விசேஷ நாளாக ஞாயிற்றுக்கிழமை பின்பற்றப்பட்டுவருகிறது. அந்நாளில் ஏராளமான பக்தர்கள் இக்கோயிலுக்கு வருகை தருகின்றனர்.
பூண்டி ஏரி
கோட்ராலை நதி முழுவதும் பூண்டி ஏரி அல்லது சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் ஆகும். இது 60 கி.மீ. தொலைவில் உள்ள சென்னை நகரத்திற்கான முக்கிய நீர் ஆதாரமாக செயல்படுகிறது. உலகெங்கிலும் உள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் புவியியலாளர்களுக்கு மத்தியில் கணிசமாக முக்கியத்துவம் பெறுகிறது.
திருவொற்றியூர்
திருவொற்றியூரில், வடிவுடை அம்மன் உடனுறை தியாகராஜ சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. அதன் பழமைத் தன்மை மாறாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது. மணற்பரப்பிலேயே நடந்து செல்லும்படி கோயில் பிரகார நடைபாதை அமைந்திருப்பது சிறப்பு. 27 நட்சத்திரங்களுக்கான 27 லிங்கங்கள் அமைந்துள்ளன.
புலிகாட் ஏரி
வங்காள விரிகுடாவில் இருந்து புலிகாட் ஏரியை பிரிக்கும் ஸ்ரீ ஹரிகோட்டா தீவு அடைப்பின் கடல் பகுதியில் அமைந்துள்ளது. இது ஒரு குறுகிய நீர் தடாகம். டச்சு குடியேற்றக்காரர்கள் முந்தைய ஆண்டு, 1609 இல் ஒரு கோட்டையை கட்டினார்கள். இதற்கு நீண்ட மற்றும் புகழ்பெற்ற வரலாறு உண்டு.