சரிந்து விழுந்து பலியான டிரைவர்; உடனே கண்டக்டர் செய்த செயல் - தப்பிய பயணிகள்!
ஓட்டுநர் மாரடைப்பால் சரிந்து விழ, கண்டக்டர் விபத்தை தடுத்து நிறுத்தியுள்ளார்.
சரிந்த டிரைவர்
திண்டுக்கல், பழனி பேருந்து நிலையத்தில் இருந்து தனியார் பேருந்து புதுக்கோட்டை கிராமத்திற்கு சென்றுள்ளது. அதனை ஓட்டுநர் பிரபு ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து சிறிது நேரத்தில் பேருந்து ஓடும் போதே மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதனை பார்த்த நடத்துநர், உடனே பேருந்தில் உள்ள பிரேக்கை தனது கைகளால் அழுத்தி சாலை ஓரத்தில் நிறுத்தியுள்ளார்.
சுதாரித்த கண்டக்டர்
இதனால் பேருந்து விபத்தில் சிக்காமல் தப்பியது. பின் பயணிகள் டிரைவர் பிரபுவை தூக்க முயன்றுள்ளனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சம்பவ இடம் விரைந்த போலீஸார் அவரது உடலை மீட்டு விசாரித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.