அப்போ அதை சாப்பிடாதீங்க - விலை உயர்வு குறித்து பாகிஸ்தான் அமைச்சர்!
பாகிஸ்தானில் உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து கோதுமை மாவு கிலோ 140 முதல் 160 வரை விற்கப்படுகிறது.
உணவு பஞ்சம்
பாகிஸ்தானில் எப்போதும் இல்லத அளவிற்கு கடுமையான உணவு பஞ்சம் எற்பட்டுள்ளது இதனையடுத்து உணவு பொருட்களின் விலை வரலாறு காணாத அளவிற்கு உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த ஆண்டை விட வாராந்திர உணவுப் பணவீக்கம் ஏறக்குறைய 31 சதவீதம் உயர்ந்துள்ளதாக அரசு வெளியிட்டுள்ள சென்சிட்டிவ் விலைக் குறியீடு (எஸ்பிஐ) தெரிவித்துள்ளது.

ஜனவரி 5, 2023 அன்று முடிவடைந்த வாரத்திற்கான விலைக் குறியீடு, கோழியின் விலையில் 82.5 சதவீத உயர்வையும், முட்டையின் விலை 50 சதவீதம் வெங்காயத்தின் விலை 415 சதவீதம் உயர்ந்துள்ளது மேலும் பாகிஸ்தானில் உள்ள மக்களின் முக்கிய உணவின் முக்கிய அங்கமான கோதுமை மாவின் விலை உயர்ந்துள்ளது.
கோதுமை மாவு
கராச்சியில், மாவு கிலோ ருபாய் 140முதல் 160 வரை விற்கப்படுகிறது. இதனிடையே இஸ்லாமாபாத் மற்றும் பெஷாவரில் 10 கிலோ மூட்டை ரூ.1500க்கும், 20 கிலோ மூட்டை ரூ.2800க்கும் விற்பனை செய்யப்படுகிறது.மாவின் விலை அதிகரிப்பு, அதிக மின்சார செலவு மற்றும் எரிசக்தி பற்றாக்குறை போன்ற காரணங்களால் விலையை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மாவு பொட்டலங்களை அரசாங்கம் வழங்கி வருகின்றது. மேலும், கடந்த ஒரு மாதத்தில் சிக்கன் விலை கிலோவுக்கு ரூ.300 வரை அதிகரித்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ சிக்கன் விலை ரூ.440-480 ஆக இருந்தது, இப்போது கிலோ ஒன்றுக்கு ரூ.650-700 ஆக உள்ளது.
விலை உயர்வு
இதுகுறித்து மத்திய உணவுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் தாரிக் பஷீர் சீமா, சிக்கன் சாப்பிடுவது உடல் நலத்துக்கு நல்லதல்ல எனக் கூறி மக்கள் அதனை சாப்பிடுவதைக் கைவிடுமாறு கேட்டுக் கொண்டார். பாகிஸ்தான் மக்களின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
உணவு
பொருட்களின் விலையை அரசு கட்டுப்படுத்தத் தவறியதால் இது போன்று நடப்பதாகவும் ஏழை மக்கள் அதிக கட்டணம் செலுத்தி பொருட்களை வாங்க முடியவில்லை என்றும் இஸ்லாமாபாத்தில் வசிக்கும் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர் .