பாகிஸ்தானில் காணப்பட்ட ஏலியன்கள் : உண்மையில் இருந்தது என்ன ?

Pakistan
By Irumporai Jan 07, 2023 04:27 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

பாகிஸ்தானில் நிலநடுக்கம் எற்பட்ட சமயத்தில் லாகூர் பகுதியில் பறக்கும் தட்டு ஒன்று காணப்பட்டதாக புகைப்படம், ஒன்று இணையத்தில் வைரலானது.

பாகிஸ்தானில் ஏலியன்கள் 

ஏலியன்களும் பறக்கும் தட்டுக்களும் பூமியை சுற்றி வருவதாக பலவேறு செய்திகள் வெளியானாலும் , இது வரை உண்மை தன்மை நீருபிக்கப்படவில்லை. இந்த நிலையில் பாகிஸ்தானில் 2023 ஆம் ஆண்டுக்குள் நுழைந்த சில நாட்களில் லாகூரில் UFO ஒன்று காணப்பட்டதாக புகைப்படத்தை பலர் பகிர்ந்துள்ளனர்.

பாகிஸ்தானில் காணப்பட்ட ஏலியன்கள் : உண்மையில் இருந்தது என்ன ? | Ufo In Pakistan Real Fact Behind

பாகிஸ்தானில் பூகம்பம் ஏற்பட்ட சமயம் , லாகூரில் UFO காணப்பட்டதாகவும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 4 பாகிஸ்தானின் லாகூர் மற்றும் பஞ்சாபின் பல நகரங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது. 4.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தின் மையம் லாகூரிலிருந்து 34 கிமீ மேற்கிலும், ஷேகுபுராவிற்கு மேற்கே 12 கிமீ தொலைவிலும் பதிவாகியுள்ளது. 

தெரு விளக்கு

ஆனால், இந்த UFO ஆனது லாகூரில் உள்ள தெருவிளக்கின் புகைப்படம் என கண்டறியப்பட்டுள்ளது. அங்கு இருக்கும் பனியின் மத்திய எறியும் தெருவிளக்கின் புகைப்படத்தை UFO போன்று காட்சியளிக்கும் வகையில் எடிட் செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஏலியன்கள் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.