நம்ம ஹனிமூன் போலாமா..காமெடியனை தாக்கிய பிரபல பாடகி- லைவ் ஷோவில் பரபரப்பு!

Viral Video Pakistan TV Program
By Swetha Feb 29, 2024 12:30 PM GMT
Report

பிரபல பாடகி காமெடியனின் சர்ச்சை கேள்வியால் ஆத்திரமடைந்து தாக்கிய சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

சர்ச்சை கேள்வி

பாகிஸ்தானை சேர்ந்த பிரபல பாடகியான ஷாஜியா மன்சூர் அன்மையில் டிவி லைவ் ஷோ ஒன்றில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் அவருடன் காமெடி நடிகர் ஷெர்ரி நன்ஹாவும் கலந்துக்கொண்டு உரையாடியுள்ளார்.

singer strikes comedian in live show

அப்போது "ஒருவேளை நமக்கு திருமணம் ஆனால், நமது ஹனிமூனுக்கு உங்களை உடனடியாக மான்டே கார்லோவுக்கு அழைத்துச் செல்வேன். நீங்கள் எந்த வகுப்பில் பயணிக்க விரும்புவீர்கள்?என்று சொல்ல முடியுமா?"என நகைச்சுவையாக கருதி கேட்டுள்ளார்.

இந்த கேள்வியை சற்றும் எதிர்பாராத ஷாஜியா மன்சூர் ஆத்திரமடைந்து,ஷெர்ரி நன்ஹாவுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.பிறகு அவரை மூன்றாம் வகுப்பில் பயணிக்கும் நபர் என்று கூறி சரமாரியாக தாக்கியுள்ளார்.இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

HONEYMOON வீடியோவை வெளியிட்ட வித்யுலேகா - ரசிகர்கள் உற்சாகம்

HONEYMOON வீடியோவை வெளியிட்ட வித்யுலேகா - ரசிகர்கள் உற்சாகம்

லைவில் தாக்குதல்

இதனையடுத்து ஷாஜியா, "கடந்த முறையும் இப்படித்தான் நடந்தது. அப்போது எனது கோபத்தை பிராங்க் என கூறி மூடி மறைத்தேன். ஆனால் இந்த முறை அப்படி இருக்கமுடியாது. நீங்கள் பெண்களிடம் இப்படித்தான் பேசுவீர்களா? ஹனிமூன் என்கிறீர்கள்" அன்று கோபமாய் திட்டினார்.

singer shaazia manzoor

 பின் நிகழ்ச்சி தொகுப்பாளர் இடையில் வந்து வாக்குவாத்தத்தை தடுத்து, இதுபோன்ற சம்பவங்களை தடுக்க ஸ்கிரிப்டை பின்பற்றவேண்டும் என்றும், அதைத் தாண்டி எதுவும் பேசவேண்டாம் என்றும் காமெடியன் நன்ஹாவிடம் கூறினார்.

மேலும், கோபம் தணியாத பாடகி ஷாஜியா,இனி இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மாட்டேன் என்றும் கூறிவிட்டு ஸ்டுடியோவில் இருந்து வெளியேறினார்.