மனைவியுடன் நெருக்கம்.. வெளியான வீடியோவால் கதறிய எம்.பி!

Pakistan
By Sumathi Nov 08, 2022 12:40 PM GMT
Report

மனைவியுடன் நெருக்கமாக இருந்த வீடியோவை யாரோ மனைவிக்கே அனுப்பி வைத்ததாக கதறி அழுதுள்ளார் எம்.பி.

எம்பி ஆசம் சுவாதி

 பாகிஸ்தான் எம்பி ஆசம் சுவாதி(75). முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் தீவிர ஆதரவாளர். இவர் கடந்த மாதம் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் எம்பியாக உள்ள ராணுவ ஜெனரல் குவாமர் ஜாவித் பாஜ்வாவை சமூக வலைதளங்களில் விமர்சித்ததாக கைது செய்யப்பட்டார்.

மனைவியுடன் நெருக்கம்.. வெளியான வீடியோவால் கதறிய எம்.பி! | Pakistani Mp Azam Swati Tears Over Fake Video

ஜாமீனில் வெளிவந்த அவர் ஆடைகள் களையப்பட்டு கேலிக்கும், சித்ரவதைக்கும் ஆளானதாக குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அவர், அடையாளம் தெரியாத எண்ணில் இருந்து என் மனைவியின் செல்போனுக்கு ஒரு வீடியோ வந்தது.

போலி வீடியோ

அந்த வீடியோவில் நானும் என் மனைவியும் படுக்கையில் நெருக்கமாக இருந்த காட்சிகள் சம்பந்தப்பட்டிருக்கின்றன. இதைக் கண்டு என் மனைவி அதிர்ச்சி அடைந்தார். நானும் என் மனைவியும் கோட்டா சென்ற போது இந்த வீடியோ எடுக்கப்பட்டிருக்கின்றது.

என் பேச்சை நாட்டில் உள்ள பெண்களும் கேட்டுக் கொண்டிருப்பார்கள் என்பதால் இதற்கு மேல் அந்த அசிங்கத்தை என்னால் விவரிக்க முடியவில்லை என கதறி அழுதார். ஆனால் இந்த வீடியோ போலியாக உருவாக்கப்பட்டது என புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது.

இச்சம்பவத்திற்கு முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், பாகிஸ்தான் அரசு அவரது மனைவியிடம் மன்னிப்பு கேட்பதாக தெரிவித்தார்.