முழு நிர்வாணமாக அடுத்த வீட்டிற்குள் புகுந்த அதிமுக முன்னாள் எம்பி - தர்ம அடி கொடுத்த குடும்பத்தினர்
நீலகிரி மாவட்ட முன்னாள் அதிமுக எம்பி கோபாலகிருஷ்ணன் மது போதையில் அடுத்த வீட்டிற்குள் நிர்வாணமாக நுழைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அவர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், அதிமுக அவை தலைவராக இருப்பவர் கோபாலகிருஷ்ணன். இவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். இவரது வீடு குன்னுரை அடுத்த முத்தாளம்மன் பேட்டையில் இருக்கிறது. இந்நிலையில், கோபாலகிருணன் தீபாவளி அன்று நன்கு மது அருந்தி இருக்கிறார். இதன் பிறகு, அதே பகுதியில் உள்ள கோபி என்பவரது வீட்டில் நிர்வாணமாக புகுந்திருக்கிறார்.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கோபியும், குடும்பத்தாரும் சேர்ந்து கோபாலகிருஷ்ணனை அடித்து துவைத்துள்ளனர். அப்போது கோபாலகிருஷ்ணன் இருந்த நிலைமை வீடியோவாக பதிவு செய்தனர்.
இது தொடர்பாக, குன்னுர் காவல் நிலையத்தில் குடும்பத்தார் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதற்கிடையில், கோபாலகிருஷ்ணன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து விசாரித்து குன்னுர் போலீசார் இருதரப்பிலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அப்போது கோபாலகிருஷ்ணன் நிர்வாணமாக வீடு புகுந்த வீடியோவை உறுதி செய்த காவல் துறை, கோபாலகிருஷ்ணன் மீதும் அவரை தாக்கிய கோபி மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.