வாலிபர்களுடன் ஆடிய 18 வயது பெண்.. வெளியான வீடியோ, ஊர் பஞ்சாயத்து வழங்கிய கொடூர தீர்ப்பு- ஷாக்!

Viral Video Pakistan Crime Murder
By Vinothini Nov 29, 2023 06:45 AM GMT
Vinothini

Vinothini

in உலகம்
Report

 இளம்பெண் ஒருவர் வாலிபர்களுடன் ஆடியதால் ஊர் பஞ்சாயத்து வழங்கிய தீர்ப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொடூரம்

பாகிஸ்தான், கோ ஹிஸ்தான் பகுதியை சேர்ந்தவர் 18 வயது இளம்பெண், இவர் சில வாலிபர்களுடன் நடனம் ஆடும் வீடியோ வெளியானது. இதனை பார்த்த இவரது குடும்பத்தினர் ஆத்திரமடைந்தனர். இது குறித்து ஊர் பெரியவர்கள் நடத்திய பஞ்சாயத்தில் அந்த இளம்பெண்ணை கொலை செய்ய உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

dance

இதனால் அந்த இளம்பெண்ணின் பெற்றோரும் அவரை கவுரவ கொலை செய்துள்ளனர். இது தொடர்பாக போலீசாருக்கு தெரியவந்தது, அவர்கள் உடனடியாக அந்த கிராமத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்பொழுது ஊர் பஞ்சாயத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மற்றொரு சிறுமியை போலீசார் மீட்டனர்.

மீண்டும் ஹாங்காங்குக்கு நேரடி விமான சேவை - விவரம் இதோ..

மீண்டும் ஹாங்காங்குக்கு நேரடி விமான சேவை - விவரம் இதோ..

விசாரணை

இந்நிலையில், இளம்பெண்ணுடன் நடனமாடிய வாலிபரையும் போலீசார் கிராமத்தினரிடம் இருந்து மீட்டனர். பின்னர், அந்த இளம்பெண் கொலை தொடர்பாக அவரது குடும்பத்தினரை போலீசார் கைது செய்தனர்.

police

இது குறித்து போலீசார், "இளம்பெண்ணை கொலை செய்தவர்கள் மற்றும் பஞ்சாயத்தில் ஆலோசனை செய்தவர்கள், பெண்ணுக்கு மரண தண்டனை விதித்தவர்கள் யார் என்பதை கண்டறிய விசாரணை தொடங்கியுள்ளோம்" என்று தெரிவித்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.