10 ஆண்டுகளாக இந்தியாவில் பாகிஸ்தானியர் செய்த செயல் - அதிரவைத்த சம்பவம்!
போலி பாஸ்போர்ட் மூலம் 10 ஆண்டுகளாகப் பெங்களூருவில் பாகிஸ்தானியர் குடும்பம் ஒன்று வசித்து வந்துள்ளது.
பெங்களூரு
கர்நாடக மாநிலம் பெங்களூருவிலுள்ள ஜிகனியில் பாகிஸ்தானியர் ஒருவர் குடும்பத்துடன் வசிப்பதாகப் பெங்களூரு காவல்துறைக்கு மத்திய உளவுத்துறை தகவல் அளித்தது.
அதன் அடிப்படையில் பெங்களூரு காவல்துறை ஜிகனியில் உள்ள சந்தேகத்துக்குரிய நபர்களின் வீடுகளுக்குச் சென்று சோதனை நடத்தினர். அப்போது 48வயதான பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவரும், அவரது மனைவி, மாமனார்,மாமியார் ஆகியோர் சிக்கினர்.
இதனையடுத்து காவல்துறையின் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அந்த நபரின் உண்மையான பெயர் ரஷித் அலிசித்திக் (48). பாகிஸ்தானில் கராச்சியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இவர் கடந்த 2013-ம் ஆண்டு வங்கதேசத்தில் உள்ள டாக்காவுக்குச் சென்று தன் காதலியைத் திருமணம் செய்து கொண்டார்.
பாகிஸ்தானியர்
அதன் பிறகு அங்கிருந்து தனது மனைவி, மாமனார், மாமியார் ஆகியோருடன் 2014-ல் போலி பாஸ்போர்ட் மூலம் சட்டவிரோதமாக டெல்லிக்குச் சென்றார். அங்கு தங்களது பெயர்களை இந்து மத அடையாள பெயர்களாக மாற்றிக்கொண்டு 2018-ம் ஆண்டு பெங்களூருவுக்குக் குடிபெயர்ந்தனர்.
பெங்களூருவைச் சேர்ந்த முகவர் ஒருவரின் உதவியுடன் ஜிகனியில் வீடு வாடகைக்கு எடுத்து சுமார் 10 ஆண்டுகளாக வசித்து வந்துள்ளார். இதனையடுத்து வழக்குப் பதிவு செய்த பெங்களூரு காவல்துறை சட்ட விரோதமாக வசித்து வந்து பாகிஸ்தானியர் குடும்பத்தைக் கைது செய்தது .