போலி பாஸ்போர்ட் மூலம் இலங்கை செல்ல முயன்ற நபர் கைது
Sri Lanka
Tamil Nadu Police
Tiruchirappalli
By Thahir
போலி ஆவணங்கள் மூலம் இலங்கை செல்ல முயன்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இலங்கை செல்ல முயன்ற நபர் கைது
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு திருநள்ளார் ஆண்டி தெருவை சேர்ந்தவர் உலகநாதன். இவரது மகன் கஜேந்திரன் நேற்று திருச்சி விமான நிலையத்தில் இருந்து இலங்கை செல்ல புறப்பட்டார்.
அப்போது இமிக்கிரேஷன் அதிகாரிகள் அவருடைய பாஸ்போர்ட்டை பரிசோதனை செய்த போது அவர் போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற்றது தெரியவந்தது.
இது தொடர்பாக இமிகிரேஷன் அதிகாரி மெய்யப்பன் திருச்சி விமான நிலைய காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி வழக்குப்பதிவு செய்து போலி பாஸ்போர்ட் மூலம் இலங்கை செல்ல முயன்ற நபரை கைது செய்தனர்.