ஒரு புறம் பணவீக்கத்தால் வாடும் நாடு..மறுபுறம் கோடியில் சொத்து சேர்த்த பிச்சைக்காரர்!

Viral Video Pakistan World
By Swetha Jun 25, 2024 10:30 AM GMT
Report

பிச்சைக்காரர் ஒருவர் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்த தகவல் இணையத்தில் வைரலாகியுள்ளது.

வாடும் நாடு 

பாகிஸ்தான் நாடு தற்போது கடும் பொருளாதார சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றது. நிலைமை மோசமானதால் பல உலக நாடுகள் மற்றும் உலக வங்கிகளிடம் இருந்து நிதியுதவி கேட்டு வருகின்றனர்.

ஒரு புறம் பணவீக்கத்தால் வாடும் நாடு..மறுபுறம் கோடியில் சொத்து சேர்த்த பிச்சைக்காரர்! | Pakistani Beggar Has A Crores Of Money As Savings

அந்நாட்டில் வசிக்கும் மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க வேண்டுமென்றால் கூட அதிக விலையை கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. எனினும், இவ்வுளவு பணவீக்கத்திற்கு மத்தியிலும் பாகிஸ்தானைச் சேர்ந்த பிச்சைக்காரர் ஒருவர் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்து வைத்து இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிச்சைக்காரன் படம் மற்றும் செல்லாத ரூபாய் நோட்டுகள் - ஏதோ சம்மந்தம் இருக்கு!

பிச்சைக்காரன் படம் மற்றும் செல்லாத ரூபாய் நோட்டுகள் - ஏதோ சம்மந்தம் இருக்கு!

பிச்சைக்காரர் சொத்து

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முல்தான் நகரை சேர்ந்தவர் ஷவுகத். பணக்கார பிச்சைக்காரரான இவர், தெருத்தெருவாக உணவிற்காகவும் பணத்திற்காகவும் ஒவ்வொரு நபரிடமும் பிச்சை கேட்டு வந்துள்ளார். அப்படி இருந்தும் இவர் தனது குழந்தைகளை நாட்டின் மிக பெரிய பள்ளியில் படிக்க வைத்து வருகிறார்.

ஒரு புறம் பணவீக்கத்தால் வாடும் நாடு..மறுபுறம் கோடியில் சொத்து சேர்த்த பிச்சைக்காரர்! | Pakistani Beggar Has A Crores Of Money As Savings

அவர்களுக்கு ரூ.1 கோடி அளவிற்கு காப்பீடும் எடுத்துள்ளார். இவருக்கு கோடிக்கணக்கில் சொத்துகள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் வங்கி கணக்கில் ரூ.17 லட்சம் பணம் இருப்பதாக அந்த நாட்டின் வரி வசூலிக்கும் நிறுவனமான பெடரல் போர்டு ஆப் ரிவென்யூ கூறியுள்ளது.

பிச்சையெடுப்பதன் மூலம் தினமும் குறைந்தபட்சம் ரூ.1000 இவர் சம்பாதித்து விடுவதாக சொல்லப்படுகிறது. இதனிடையே இவர் தனிப்பட்ட ரீதியாக தனது நிதி நிலைமை குறித்து அடிக்கடி சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.