பிரபல நடிகை வீட்டில் சடலமாக மீட்பு - அதிர்ச்சியில் திரையுலகம்

Pakistan Death Actress
By Sumathi Jul 09, 2025 10:04 AM GMT
Report

நடிகை ஹுமைரா வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நடிகை ஹுமைரா மறைவு

பாகிஸ்தானை சேர்ந்தவர் பிரபல நடிகை ஹுமைரா அஸ்கர் அலி(32). இவர் கராச்சியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இந்நிலையில், அங்கு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

Humaira Asghar

சமீபகாலமாக வாடகை செலுத்தாமல் இருந்து வந்துள்ளார். இதனால், வீட்டின் உரிமையாளர் அங்கு சென்றுபார்த்ததில், அவர் இறந்த நிலையில் கிடந்துள்ளார்.

தமன்னா விவகாரம் - சூடுபிடித்த மைசூர் சாண்டல் சோப்பு விற்பனை!

தமன்னா விவகாரம் - சூடுபிடித்த மைசூர் சாண்டல் சோப்பு விற்பனை!

தீவிர விசாரணை

தகவலின்பேரில் உடனே விரைந்த போலீஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர். மேலும், அவர் இறந்து 2 வாரங்களுக்கு மேலாயிருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

பிரபல நடிகை வீட்டில் சடலமாக மீட்பு - அதிர்ச்சியில் திரையுலகம் | Pakistani Actress Humaira Found Dead In Karachi

தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடற்கூராய்வுக்கு பின் இறப்புக்கான காரணம் தெரியவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.